மிஸ்டர் ஐ.க்யூ-புதிர் பக்கங்கள் -பாகம் 1

17 May 2010 ·

1. புதிதாகக் கட்டப்பட்ட அந்தச் சிறைச்சாலையில் நிறையக் கைதிகளை அடைத்தனர். பிறகுதான் தெரிந்தது, அங்கிருக்கும் ஒரு மதில் சுவர் அவ்வளவு சிறியது என்று! யோசித்த சிறை அதிகாரிகள், அந்தச் சுவருக்கு அருகில் சும்மாச்சுக்கும், 'இங்கு 22,000 வோல்டேஜ் மின்சாரம் செல்கிறது. யாரும் தொட வேண்டாம்' என்று போர்டு மாட்டி, சில கம்பிகளையும் நட்டுவைத்தனர். அந்தச் சிறையில் புதிதாக அடைக்கப்பட்ட ஒரு கைதி அன்றிரவே அந்த மதில் சுவரைத் தாண்டிக் குதித்துச் சென்றான். எப்படி?

2. வரிசையாக வாரத்தின் மூன்று நாட்கள் சொல்லுங்கள். ஆனால், கிழமைகள் பேர் வரக் கூடாது!

3. லலிதாவின் அப்பாவுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். ABXX, ACXY, ADXZ எனில் நான்காவது குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும்?

4. ரூபா சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றாள். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினாள். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரூபா சாப்பிட்டாள். மொத்தம் ரூபா சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

5. என் நண்பனுக்குத் திருமணம் ஆகவில்லை. அவன் எந்தக் குழந்தையையும் தத்து எடுக்கவும் இல்லை. ஆனாலும், அவனுக்கு வரும் கடிதங்கள் எல்லாம், 'அன்புள்ள அப்பாவுக்கு' என்றே தொடங்கும். மர்மம் என்ன?

6. கீழே இரண்டு கணக்குகள் உள்ளன. இரண்டில் எதனுடைய கூட்டுத்தொகை பெரியது என்று பார்த்தவுடனேயே சொல்லுங்கள்.

புதிர் விடைகள் :

1) அவன் எழுதப் படிக்கத் தெரியாதவன். அதனால் அந்த போர்டு வாசகங்களைப்பற்றிக் கவலைப்படாமல் தாண்டிக் குதித்துச் சென்றான்!

2) நேற்று, இன்று, நாளை!

3) ABXX, ACXY, ADXZ மற்றும் லலிதா. எப்பூடி!

4) 21 சாக்லேட் என்று நீங்கள் கணக்கிட்டு இருந்தால்கூடத் தப்பு. மொத்தம் ரூபா சாப்பிட்டது 22 சாக்லேட்டுகள். காசு கொடுத்து வாங்கியது 15 சாக்லேட்டுகள். அதன் 15 உறைகளையும் திருப்பிக் கொடுத்துப் பெற்றவை ஐந்து சாக்லேட்டுகள். அதில் மூன்று உறைகளையும் கொடுத்துப் பெற்றது ஒரு சாக்லேட். ஏற்கெனவே கையிலிருக்கும் இரண்டு சாக்லேட், இப்போது கையிலிருக்கும் ஒரு சாக்லேட்... இவற்றின் உறைகளைக் கொடுத்துப் பெற்றது ஒரு சாக்லேட். ஆக 15+5+1+1=22.

5) என் நண்பனின் பெயர் 'அப்பாவு'!

6) முதல் கணக்கு என்று கணித்திருந்தால் நீங்கள் கணிதப் புலி அல்ல. இரண்டின் கூட்டுத் தொகையும் ஒன்றுதான். கூட்டிக் கழித்துப் பாருங்கள்... கணக்கு சரியாகத்தான் வரும்

ஆனந்த விகடன்,

2 comments:

Madhavan Srinivasagopalan said...
December 14, 2010 at 5:46 PM  

உங்களது இந்தப் பதிவு (புதிர்) வலைச்சரத்தில்இன்று என்னால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முடிந்தால் வந்து பார்க்கவும்.

cheena (சீனா) said...
December 14, 2010 at 7:48 PM  

ஆகா - அத்தனையும் போட்டு விட்டேன்

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites