“குஷ்பு உளறிக் கொட்டியிருக்கிறார்” – தாக்குகிறார் நடிகை விந்தியா..!

08 June 2010 ·

“குஷ்பு உளறிக் கொட்டியிருக்கிறார்” – தாக்குகிறார் நடிகை விந்தியா..!
சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்த நடிகை குஷ்பு கலைஞரின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய பேச்சை விமர்சித்து பேட்டியளித்துள்ளார் இப்போது அ.தி.மு.க.வில் இருக்கும் நடிகை விந்தியா.

விந்தியாவின் பேட்டி இது :

“குஷ்புவும் நானும் சினிமாவில் தோழிகள். அவரும் நானும் இணைந்து சில படங்களில் பணியாற்றியிருக்கிறோம். இதனால் எங்கள் இருவருக்கும் இடையில் சகோதரித்துவ பாசவம் உண்டு. அவர் அரசியலுக்கு வந்ததை நான் மனமகிழ்வுடன் வரவேற்கிறேன்.

ஏதோ கட்சியில் சேர்ந்தோம். முதல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறோம் என்பதற்காக கட்சித் தலைமையைப் புகழ் பாட வேண்டும் என்பதற்காக குஷ்பு ஏதேதோ உளறிக் கொட்டியிருக்கிறார்.

உதாரணத்துக்கு பெண்களின் உரிமைக்காகப் பாடுபட்ட ஒரே தலைவர் கருணாநிதி. ஒரே கட்சி தி.மு.க. என்பது போல அவர் பேசியிருக்கிறார். அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு பதில் சொல்ல முடியாது.

இதே குஷ்பு தி.மு.க.வில் இணைவதற்கு முதல் நாள்வரை, “எனக்குப் பிடித்த தலைவி அம்மாதான். நான் அவரது ரசிகை” என்று அல்லவா வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருந்தார். எங்க அம்மாவின் அருமை, பெருமைகளை அவர் அறியாமலா ரசிகையாக இருந்திருப்பார்..?

தி.மு.க. ஆட்சியில்தான் ஆண்களைவிட பெண்கள் அதிகம் சாதிப்பதாக குஷ்பு சொல்கிறார். அந்தச் சாதனைப் பட்டியலை அவர் சொல்லட்டும். பார்க்கலாம். குறைந்தபட்சம் 500 பக்கம் அவர் சாதனைப் பட்டியலை வாசித்தால், நாங்கள் எங்கள் அம்மாவின் சாதனையை 1500 பக்கங்களுக்கு வாசிப்போம்..

அம்மாவை மட்டுமல்ல எம்.ஜி.ஆரைப் பற்றியும் குஷ்பு பேசியிருக்கிறார். அப்படிப் பேச குஷ்புவிற்கு என்ன தகுதியிருக்கிறது? எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேச கலைஞரே தயங்கும்போது, குஷ்பு எப்படி பேசலாம்? இன்றைக்கும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ள ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்.தான்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் திரைப்படங்களுக்குப் பெண் பெயர்களை வைக்கவில்லை. கதையின் முக்கியத்துவம் கருதிதான் அது போன்ற பெயர்களை அவர் சூட்டியுள்ளார்.

எம்.ஜி.ஆர். அவரது படங்களுக்குத் ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாய்க்குப் பின் தாரம்’, ‘தாயைக் காத்த தனயன்’ என்றெல்லாம் பெயர் வைத்திருந்தது குஷ்புவுக்கு எங்கே தெரியப் போகிறது..?

தலைவர் எம்.ஜி.ஆர். அவர் நடித்த படங்களில் எல்லாம் தாய்க்குலத்துக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில்தான் நடித்திருப்பார். இதெல்லாம் குஷ்புவிற்கு எப்படித் தெரியும்? முதல் கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் கை தட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக யாரோ எழுதிக் கொடுத்ததை குஷ்பு பேசியிருப்பார்.

அழகிரி அடியெடுத்து வைத்தால் எல்லாமே அதிரடிதான். இவரு பெயரைக் கேட்டாலே சும்மா அதிரும் என்று சில பஞ்ச் டயலாக்குகளையும் குஷ்பு பேசியிருக்கிறார். இவர் இப்படி பஞ்ச் டயலாக் பேசவா அரசியலுக்கு வந்தார்..? குஷ்பு தேர்தல் பிரச்சாரம் செய்து ஒரு ரவுண்ட் வரட்டும். 2011-ல் யாருக்கு அதிரும், யாருக்கு எகிறும் என்பது அப்போது தெரியும்” என்று அதிரடியாகப் பேசியுள்ளார் விந்தியா

2 comments:

vijayan said...
June 9, 2010 at 2:27 AM  

தமிழ்நாடு வெளங்கிடும்.

Aathavan said...
June 9, 2010 at 6:49 AM  

எனது நன்றிகள்

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil