‘ரத்த சரித்திரா’வுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் சீமான்..!

09 June 2010 ·

‘ரத்த சரித்திரா’வுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் சீமான்..!
அடிக்கு அடி, அன்புக்கு அன்பு என்று புதிய சித்தாந்தத்தோடு புறப்பட்டிருக்கிறது ‘நாம் தமிழர்’ கட்சி.

“நீங்க அன்பை கொடுத்தா நான் அன்பை கொடுப்பேன். வாளை எடுத்தா நானும் எடுப்பேன்” என்று வெளிப்படையாக அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சமீபகாலமாக முன்னெடுக்கும் போராட்டங்கள் பலராலும் உற்று நோக்கப்படுகிறது.

“இஃபா திரைப்பட விழாவில் அமிதாப்பச்சன் கலந்து கொள்ளக்கூடாது” என்று வலியுறுத்தி இவரது தம்பிகள் நடத்திய போராட்டம் தமிழ் படைப்பாளிகள் மத்தியில் தனிப்பெரும் அந்தஸ்தை தேடி தந்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த அஸ்திரத்தை ஏவ தயாராகிவிட்டாராம் சீமான்.

இந்திப் பட நடிகர்களில் சல்மான்கான், விவேக் ஓபராய் உள்ளிட்ட சிலர் மட்டும் இலங்கையில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்கள்.
இவர் நடித்த ‘ரத்த சரித்திரம்’ என்ற படம் இம்மாதம் தமிழில் வெளிவரப் போகிறது. தங்கள் உத்தரவை மீறி இலங்கைக்கு சென்ற பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்த படங்களை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அறிவித்திருக்கிறது.

இதன்படி ஹரித்திக்ரோஷன் நடித்த ‘கைட்ஸ்’ என்ற படத்தை ஒரே நாளில் தியேட்டரிலிருந்தே தூக்கிவிட்டார்கள்.  இந்நிலையில் விவேக் ஓபராயின் ‘ரத்த சரித்திரம்’ படத்தை தமிழ் நாட்டில் வெளியிட முடியுமா? சங்கங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி. நாம் விடக்கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம் சீமான்.

விவேக் ஓபராயுடன் சூர்யாவும் இதில் நடித்திருப்பதால் டைரக்டர் பாலாவின் மூலமாக சீமானை சரிகட்டும் முயற்சி நடைபெறுகிறதாம். மசிவாரா சீமான்..?

3 comments:

rk guru said...
June 9, 2010 at 2:24 AM  

சிங்கம் வெளியேறும்....

உங்களுக்கு ஒட்டு போட்டாச்சு என் பதிவு தமிளிஷ்யில் வெளியாகி உள்ளது. எனக்கும் ஒரு ஒட்டு போடுங்க...
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html

பரிதி நிலவன் said...
June 9, 2010 at 5:02 AM  

சூர்யா நடித்திருந்தால் என்ன? நம் உணர்வுகளை புரிந்து கோள்ளாத/புறக்கணித்த பாலிவுட் பைத்தியங்களின் படங்களை நாமும் புறக்கணிக்க வேண்டும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இன்னமும் கேணையர்களாக இருக்கக் கூடாது

Aathavan said...
June 9, 2010 at 6:49 AM  

r k குரு ,பருதி நிலவன் உங்கள் இருவருக்கு எனது நன்றிகள்

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil