சிங்கமுத்துவால் மன உளைச்சலில் தவிக்கிறார் வடிவேலு! -
வடிவேலு ஹீரோவாக 3 வேடங்களில் நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை இயக்கியவர் தம்பி ராமையா.
இவர் தற்போது ஒரு கூடை முத்தம் என்ற காதல் படத்தை இயக்கி வருகிறார்.
வடிவேலு சிங்கமுத்து தகராறு குறித்து அவரிடம் கருத்து கேட்டபோது இப்படிக் கூறினார்:
வடிவேலுவும், சிங்க முத்துவும் 25 ஆண்டு கால நண்பர்கள். மிக நெருக்கமாக இருந்தார்கள். இப்படி மோதிக் கொள்வார்கள் என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
வடிவேலு திரையுலகில் ஜாம்பவான். மிக சிறந்த அறிவாளி. அவர் மனம் தற்போது காயப்பட்டு இருப்பது ரசிகர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது. மக்களை சிரிக்க வைக்கும் அந்த நல்ல கலைஞர் இப்போது உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கிறார்.
வடிவேலு இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று விரும்புகிறேன். அவர் நினைத்தால் முதல்வரிடமே நேரடியாகச் சொல்லி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம். விருப்பு வெறுப்புகளையெல்லாம் கடந்து பிரச்சினைகளிலிருந்து மீண்டு அவர் வர வேண்டும். நல்ல மன வலிமையோடும், தெம்போடும் தொடர்ந்து ரசிகர்களை வடிவேலு சிரிக்க வைக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாக இருக்கிறது.
வடிவேலுக்கு எந்த வகையிலும் சிங்கமுத்து நிகரானவர் அல்ல. வடிவேலு நகைச் சுவையில் கடல் போன்ற வர். சிங்கமுத்து புராணம் படித்தவர். அவர் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. வடிவேலுவுடன் அவர் சுமூகமாகப் போகவேண்டும்..." என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)



Ontario Time


0 comments:
Post a Comment