16 April 2010 ·


அப்போ ஜிந்தா... இப்போ ஷில்பா!

ரை இறுதி ஜுரத்தில் சூடு கிளப்பி வருகிறது ஐ.பி.எல்!

கிரவுண்டில் கிலியோடு இருந்தாலும், வெளியே ஜாலி கபடி ஆடுகிறார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர். 'மெமரி வீட்டா' விளம்பரப் படப் பிடிப்புக்காக டோனி, ஜஸ்டின் கெம்ப், மைக் ஹஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, ஜகாத்தி ஆகியோர் பார்க் ஷெராட்டனில் இருந்தார்கள்.

தேர்ந்த நடிகர்போல் சிறப்பாக நடித்தது டோனி மட்டும்தான். 'இந்த ஸ்டைல் ஓ.கே-வா?', 'இப்படி நடந்து வரலாமா?', 'டயலாக்கை இப்படி மாற்றிக் கொள்ளலாமா?' என்று டைரக்டர் சந்தானத்திடம் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தார் டோனி

பாதுகாப்புக் காரணங்களுக்காக வீரர்கள் யாரும் ரூமைவிட்டு வெளியே வருவது இல்லை. சுரேஷ் ரெய்னா மட்டும் அடிக்கடி ஹோட்டல் லாபிக்கு வந்து ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போடுவதோடு, கேமராக்களுக்கு போஸ் கொடுக்கிறார்!

1,500 கோடி ரூபாய்க்கு கொச்சி டீமை ஏலம் எடுத்திருக்கும் 'ரென்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் திருதிருவென முழித்துக்கொண்டு இருக்கிறது. 'அந்த நிறுவனத்தின் சைலன்ட் பங்குதாரர்களில் ஒருவர் ரவி சாஸ்திரி. இன்னொருவர் வெளியுறவுத் துறை இணை

அமைச்சர் சசி தரூர்' என்று கிளம்பியிருக்கும் வதந்தி தான் திணறலுக்குக் காரணம்

ஐ.பி.எல். போட்டிகள் முடிந்ததும் நள்ளிரவு பார்ட்டிகள் களைகட்டுகின்றன. இதில் வீரர்கள், நடிகைகள், மாடல்கள் மட்டும் இல்லாமல் பொதுமக்களும்கலந்து கொள்ள முடியும். கட்டணம் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே!

ஐ.பி.எல். பார்ட்டிகளில் ஃபேஷன் ஷோவும் தவறாமல் உண்டு. 10 நிமிடங்கள் மட்டுமே நடக்கும் இந்த ஃபேஷன் ஷோவில் ஏகப்பட்ட மாடல்கள், டிஸைனர்கள் வலம் வருகிறார்கள். ஷோ முடிந்ததும், மாடல்களை ரவுண்ட் கட்டு கிறது கரன்ஸி கூட்டம்!

சென்ற ஐ.பி.எல். போட்டிகளில் கட்டிப்பிடி டெக்னிக்கில் பின்னியெடுத்த பிரீத்தி ஜிந்தா இந்த முறை சைலன்ட் ஆகிவிட்டார். அவருக் குப் பதில் ஷில்பா ஷெட்டி இந்த முறை கட்டிப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார். வீரர்கள் மட்டுமில்லாமல் பேட்டி எடுக்க வரும் நிருபர்களையும் உணர்ச்சிவசப்பட்டு கட்டிப்பிடிக்கிறார் ஷில்பா. அவரைப் பேட்டி எடுக்க எக்கச்சக்க போட்டி!

விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா - தீபிகா படுகோன்தான் இந்த சீசனின் செம ஹாட் ஜோடி. கேத்ரினா கைஃபை ஓரங்கட்டி, அந்த இடத் தைப் பிடித்துவிட்டார் தீபிகா. மீடியா இந்த இருவரை மட்டும் ஃபோகஸ் செய்வதால், லோக்கல் அம்பாஸடர் கள் உபேந்திரா - திவ்யா ஸ்பந்தனா ஜோடி செம டென்ஷனில் இருக்கிறது!

ஐ.பி.எல். ஸ்பான்ஸர் டி.எல்.எஃப் நிறுவனத்தின் லோகோ கிரவுண்டில் வரையப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது மத்திய விளையாட்டு அமைச்சகம். காரணம், அதன் லோகோவில் இந்திய வரைபடம் இருக்கிறது. கால் மிதிபடுகிற இடத்தில் இந்தியாவின் வரைபடம் இருப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து, லலித் மோடிக்குக் கடிதம் அனுப்பிக் காத்திருக்கிறார்கள்!

ஜூலை மாதம் நடக்க இருக்கிறது ஐ.பி.எல். சீசன்-4ன் ஏலம். மொத்தம் 500 வீரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். அதிகபட்சமாக நான்கு இந்திய வீரர்கள், இரண்டு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக்கொள்ள முடியும். எல்லா அணிகளும் யாரை நீக்குவது, எங்கே இருந்து யாரைத் தூக்குவது என்று ஸ்கெட்ச் போட்டு யோசிக் கின்றன!

'அடுத்த ஆண்டு டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்க மாட்டார்' என்பதே ஹாட் டாக். அடுத்த ஆண்டு களம் இறங்கும் சஹாரா அணிடோனிக் குப் பெரும் தொகை பேரம் பேசி இருக்கிறதாம்!

அடுத்த ஆண்டு இரண்டு அணிகள் கூடுதலாகச் சேர்ந்திருப்பதால், 60 போட்டிகளில் இருந்து 94 போட்டிகளாக ஐ.பி.எல். விரிவடைய இருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு முதல் சனி, ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் காலை நேரத்திலும் போட்டிகள் நடக்கும்.

பாலி, கோலி, டோலி, மல்லு, ஸாண்டல்வுட் எல்லாம் இப்போதே கவலையில்!



0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites