வடிவேலு வீட்டில் மர்ம நபர்களால் பரபரப்பு

27 April 2010 ·


வடிவேலு வீட்டில் மர்ம நபர்களால் பரபரப்பு

மதுரையில் உள்ள நடிகர் வடிவேலு வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ஐராவதநல்லூரில் சிரி்ப்பு நடிகர் வடிவேலுக்கு சொந்தமான வீடு உள்ளது. இங்கு நேற்று இனோவா காரில் (டி.என்.59, ஏ.எப்.5468) மூன்று ஆண், ஒரு பெண் வந்தனர். அவர்கள் வடிவேலு வீட்டை போட்டோ எடுத்தனர். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, "வடிவேலு இருக்கிறாரா; எங்கு சென்றார்?' என மிரட்டும் தொனியில் கேட்டு சென்றனர். இதையடுத்து வடிவேலு உறவினர் முருகேசன் சிலைமான் போலீசில் புகார் செய்தார். அதில், அடையாளம் தெரிந்த பெயர், முகவரி தெரியாத நான்கு பேர் வந்து எங்களை மிரட்டி விட்டுச் சென்றனர், என கூறியிருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இந்திய தண்டனை சட்டம் 448 (அத்துமீறி நுழைதல்), 506 (1) (மிரட்டுதல்) பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.நடிகர் வடிவேலு ஆரம்பத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் மோதினார். அவர்களுக்கு இடையே நடந்த மோதலில் சென்னையில் உள்ள வடிவேலு வீடு தாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆவேசமான வடிவேலு, விஜயகாந்துக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாகவும், அவர் போட்டியிடும் தொகுதியில் எதிர்ந்து போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று பேட்டி கொடுத்தார். அதன் பின்னர் அந்த பிரச்னை கப் சிப் ஆகி விட்டது. இந்நிலையில் தற்போது தன்னுடன் நடித்த சக காமெடி நடிகர் சிங்கமுத்து நில மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் கூறியுள்ளார். ஆனால் சிங்கமுத்து அந்த புகாரை மறுத்ததுடன், வடிவேலுதான் தன்னை ஏமாற்றி விட்டார் என்று பதில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வேறு சமீபத்தில் வடிவேலுவின் சென்னை மற்றும் மதுரை வீடுகளில் சோதனை நடத்தி பரபரப்பை கிளப்பினார்கள். இப்போது மதுரையில் உள்ள வடிவேலு வீட்டில் மர்ம நபர்கள் மிரட்டிச் சென்ற ‌விவகாரம் புதிய பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil