நித்யானந்தா ஆணா, பெண்ணா! பரிசோதிக்க போலீசார் முடிவு?

29 April 2010 ·

நித்யானந்தா ஆணா, பெண்ணா! பரிசோதிக்க போலீசார் முடிவு?
நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த கர்நாடக சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மத உணர்வுகளை புண்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தா போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.


இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்யானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.


போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்யானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. நித்யானந்தாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

(எனக்கு ஆண்மை பரிசோதனை செய்யுங்கள்: நித்யானந்தா)

நான் ஆண் மகனே இல்லை. எனக்கு ஆண்மை பரிசோதனை செய்யுங்கள் என்று கர்நாடக சிஐடி போலீசாரின் விசாரணையில் நித்யானந்தா கூறியுள்ளார்.

மத உணர்வுகளை புண்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 21ஆம் தேதி இமாச்சலப்பிதேசத்தில் நித்யானந்தா கைது செய்யப்பட்டார். இமாச்சலப்பிரதேசத்தில் தன்னை கைது செய்ய வந்த கர்நாடக சிஐடி போலீசாரிடம் நான் ஆண் மகனே இல்லை. என் மீது எப்படி பாலியல் புகார் கொடுப்பார்கள், ரஞ்சிதாவுடன் இருப்பது நானல்ல. என் இமேஜை பாழ்படுத்துவதற்காக கிராபிக்ஸ் செய்து வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது என நித்யானந்தா வாதம் செய்துள்ளார்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites