17 April 2010 ·


ஹம்மரில் ஹாரிஸ்!

கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்! இசையால் பரவசப்படுத்தும் ஹாரிஸ், இப்போது ஹம்மர் காட்டி வியக்க வைக்கிறார்! யெஸ்... டோனி, ஹர்பஜன், உதயநிதி ஸ்டாலின் வரிசையில் ஹாரிஸ் வீட்டிலும் இப்போது கம்பீரமாக நிற்கிறது ஹம்மர் ஹெச்-3. இந்தியாவில் எல்லோரிடமும் கறுப்பு நிற ஹம்மர் இருக்க... முதன்முறையாக சில்வர் நிற ஹம்மரை வாங்கியிருக்கிறார் ஹாரிஸ்!

சென்னை சாலைகளில் ஹம்மருடன் வலம் வரும் ஹாரிஸ் ஜெயராஜைச் சந்தித்தோம்!

''ஹம்மர் ஆசை எப்படி வந்தது?''

''12 வயதில் கீ-போர்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்த நான், 14 வயதில் கார் ஓட்ட ஆரம்பித்துவிட்டேன். இப்போது புரிந்திருக்கும், கார்கள் மேல் எனக்கு உள்ள ஈர்ப்பு.


அதுவும் எஸ்யூவி என்றால் காதல் பீறிடும். சமீபத்தில்தான் முதல் முறையாக ஹம்மரை துபாயில் பார்த்தேன். அங்கு பாலைவனத்தில் ஓட்டுவதற்கு இந்த காரைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.


ஏற்கெனவே என்னிடம் பிஎம்டபிள்யூ 650-ஐ ஸ்போர்ட்ஸ் கார் இருக்கிறது. ஆனால், குடும்பம் முழுதும் உட்கார்ந்து பயணம் செல்கிற மாதிரி சொகுசு கார் எதுவும் இல்லை. அப்போதுதான் ஹம்மர் நினைவுக்கு வந்தது. இந்தியாவில் டீலர்கள் யாரும் இல்லையே... எப்படி வாங்குவது என்று யோசித்தபோது உதயநிதி ஸ்டாலின்

நினைவுக்கு வந்தார். ஹம்மரை எப்படி வாங்குவது என்று அவரிடம் அட்வைஸ் பெற்று புக் செய்தேன். அதுவரை நான் சில்வர் கலர் ஹம்மரை நேரில் பார்த்ததில்லை. இன்டர்நெட்டில் படங்களைப் பார்த்ததுடன் சரி, சில்வர் கலர் எப்படி இருக்குமோ என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால், நான் நினைத்தது போலவே பிரைட்டாக இருக்கிறது ஹம்மர்!''

''நம் ஊரில் ஹம்மரை ஓட்ட முடிகிறதா?''

''நம் ஊருக்கு சரியான கார் ஹம்மர்தான். எவ்வளவு பெரிய ஸ்பீடு பிரேக்கர் இருந்தாலும் கவலையேபட வேண்டாம். அந்த அளவுக்கு இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம். அதே மாதிரி, காரை வெளியே இருந்து பார்க்கத்தான் பெரிதாகத் தெரிகிறது. உள்ளே அமர்ந்தால் ஒரு சின்ன காரை ஓட்டுகிற மாதிரிதான் வசதியாக இருக்கிறது. சொல்லப் போனால், இதில் பார்க்கிங் செய்வது, ரிவர்ஸ் எடுப்பது எல்லாம் செம ஈஸி தெரியுமா?''

''ஹம்மர் வீட்டுக்கு வந்ததும் எங்கே சென்றீர்கள்?''

''பெரிதாக லாங் டிரைவ் எங்கும் செல்லவில்லை. போன மாதம் நானும் பிரபுதேவாவும் பாடல் கம்போஸிங்குக்காக பாண்டிச்சேரி சென்றோம். அங்கு ராத்திரி ஹம்மரை எடுத்துக்கொண்டு ரவுண்ட் அடிப்பதுதான் எங்களோட ஒரே ஹாபி! அதன் பின்புதான் காருக்குள்ளேயே பாடல் கம்போஸிங் செய்யும் அளவுக்கு இடம் இருக்கிறது என்று கண்டுபிடித்து, ஹம்மரை மூவிங் கம்போஸிங் ஸ்டுடியோவாக மாற்றி விட்டோம்!''

''நீங்கள் காரில் எவ்வளவு வேகம் வரை செல்வீர்கள்?''

''நான் அதிகபட்சம் என்னுடைய பிஎம்டபிள்யூவில் மணிக்கு 210 கி.மீ வேகம் வரை சென்று இருக்கிறேன். ஆனால், இதைப் படிக்கும் மக்கள் ஹாரீஸ் பாட்டு மட்டும் ஸ்லோவாகப் போடுகிறார். காரை மட்டும் இவ்வளவு ஸ்பீடா ஓட்டுவாரா என்று சிரிக்கப் போகிறார்கள்'' என்று சொல்லிவிட்டு அடக்க முடியாமல் சிரிக்கிறார் ஹாரிஸ்.

''கார் ஓட்டும்போது பாட்டு கேட்பீர்களா?''

''நோ! எப்பவுமே நான் கார் ஓட்டும்போது மியூஸிக் கேட்க மாட்டேன். ஆல்ப்பைன் ஹை-எண்ட் மியூசிக் சிஸ்டம் காரில் இருக்கிறது. ஆனால், பாட்டுக் கேட்டுக்கொண்டு கார் ஓட்டுவது எனக்குப் பிடிக்காது. நான் கார் ஓட்டுவதே ஒரு ரிலாக்ஸேஷனுக்காகத்தான். அங்கேயும் நான் பாட்டுக் கேட்க விரும்புவது இல்லை.''

''உங்கள் ஹம்மரில் வேறு என்ன வசதிகள் எல்லாம் இருக்கிறது?''

''ஜீபிஎஸ் இருக்கிறது. அதனால், நாமாக எங்கே சென்றாலும் ரூட்டைத் தேட வேண்டிய சிக்கல் இல்லை. ரெஸ்ட்டாரன்ட், காபி ஷாப், முக்கியமாக பெட்ரோல் பங்க் என எதைத் தேடினாலும் அருகில் என்ன இருக்கிறது என்கிற லிஸ்ட் வந்துவிடுகிறது. அதனால், எந்த இடத்துக்கும் தைரியமாகச் செல்ல முடிகிறது. காரில் டிஷ் டிவியும் பொருத்தி இருக்கிறேன். நியூஸ், கிரிக்கெட் மேட்ச் எதையும் மிஸ் பண்ணாமல் பார்க்கலாம். இந்த டிஷ் டிவி பொருத்திய பிறகுதான் என் குழந்தைகள் காரில் வரும்போது, கார்ட்டூன் சேனல் பார்க்க முடியவில்லையே என கத்தாமல் இருக்கிறார்கள்!

காரில் ஆக்சஸரீஸ் பலமாக இருக்கிறதே?''

''ஆமாம். ஹம்மர் காருக்குத் தேவையான ஆக்சஸரீஸ் விற்பதற்கென்றே அமெரிக்காவில் 50 கடைகள் இருக்கின்றன. இதில் பெஸ்ட்டான ஆக்சஸசரீஸ் அனைத்தையும் வாங்கிப் போட்டுவிட்டேன்.''

''ஹம்மர் வாங்கியாச்சு... அடுத்தது?''

''மஸராட்டி கிராண்ட் டூரிஸ்மோதான் என் அடுத்த டார்கெட்!


நன்றி விகடன் '

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites