காப்புரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து ஆராய்வதற்கு நடிகர் அமீர் கான் உள்பட 10 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்த நிலையில், ராயல்டி தொகை வழங்கும் முறை தொடர்பாக சினிமா தயாரிப்பாளர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில், அமீர்கானுக்கும் பிரபல இந்தி பாடலாசிரியரும் கதாசிரியருமான ஜாவித் அக்தருக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. ஒரு படத்தின் பாடல்களின் வெற்றிக்கு திரைக்கதை, நடிகர்கள், இசையமைப்பாளர் போன்றோரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்பதும், ஒரு திரைப்படத்துக்கு பாடலாசிரியர்களை விட திரைக்கதையாசிரியர்களுக்கே அதிக ராயல்டி தர வேண்டும் என்பது அமீர்கானின் வாதமாக இருந்துள்ளது. "ஒரு பாடல் பிரபலமடைவதற்கு அதில் நடித்துள்ள நடிகர் தான் காரணம். அப்பாடலை எழுதியவர் அல்ல," என்று நேரடியாகவே அமீர் கான் கூறியதாக தெரிகிறது. அதற்கு கோபத்துடன் பதிலளித்த பாடலாசிரியர் ஜாவித் அக்தர், " 'பாப்பா கேதே ஹெய்ன்' எனும் பாடல் மிகப் பெரிய வெற்றியைத் தந்த போது, அதில் நடித்த அமீர் கான் என்ற அறிமுக நடிகர் அதிகம் அறியப்படாத நடிகராகவே இருந்தார்," என்று சுட்டிக்காட்டி பாடலாசிரியரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார். இந்தக் கருத்து மோதல்கள் வெளியே தெரிய ஆரம்பித்த போது, எழுத்துப் படைப்பாளிகளை அமீர் கான் அவமதித்துவிட்டதாக புகார்கள் பரவின. இந்நிலையில், காப்புரிமைச் சட்டத் திருத்தத்துக்கான குழுவிலிருந்து அமீர் கான் விலகியுள்ளார். அவர் தனது விலகல் கடிதத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலுக்கு அனுப்பியுள்ளார். நன்றி விகடன் கருத்து மோதல் எதிரொலி... காப்புரிமைச் சட்டத் திருத்த குழுவிலிருந்து நடிகர் அமீர் கான் விலகல் மும்பை, பிப்.17,2010 : திரைப்பட பாடல் ஆசிரியர்களை அவமதிப்பதாக எழுந்த புகார்கள், பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தருடன் கருத்து மோதல் முதலிய காரணங்களால், காப்புரிமைச் சட்டத் திருத்தத்துக்கான குழுவிலிருந்து நடிகர் அமீர் கான் விலகிக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment