ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது யார்? நித்யானந்தாவின் புதுக்கதை!

27 April 2010 ·

ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது யார்? நித்யானந்தாவின் புதுக்கதை!

Nithyanada new version of Ranjitha`s lure
நடிகை ரஞ்சிதாவும், சாமியார் நித்தியானந்தாவும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவி உடையணிந்து பக்தர்களிடம் தன்னை கடவுளாக காட்டிக் கொண்ட நித்தியானந்தா, நடிகையுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து அவரது பக்தர்கள் கொந்தளித்தார்கள். இதையடுத்து 45 நாட்களுக்கும் மேலாக ‌தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த சாமியார் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த பெங்களூரு போலீசார், காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் நடிகை ரஞ்சிதா குறித்த கேள்விக்கு பதில் அளித்த நித்யானந்தா, அந்த வீடியோ காட்சியை நானும் பார்த்தேன். வீடியோவில் இருப்பது நடிகை ரஞ்சிதாதான். ஆனால் அந்த காட்சியில் இருப்பது நான் இல்லை, என்று கூறி மறுத்திருக்கிறார்.

இதையடுத்து நடிகை ரஞ்சிதாவை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். தற்போது ரஞ்சிதா எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பது போன்ற விவரங்கள் எதுவும் தெரியாத நிலையில், ரஞ்சிதாவுடன் இருப்பது நான் இல்லை என்று சாமியார் கூறியிருப்பது இந்த வழக்கில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஞ்சிதா வந்து உண்மையை சொன்னால் வழக்கை மேற்கொண்டு நடத்த வசதியாக இருக்கும் என போலீசார் கருதுகிறார்கள்.

சென்னையி்ல நடிகர் சங்கத்திற்கு எதிரே இருக்கும் ரஞ்சிதாவின் வீடு பூட்டப்பட்டிருக்கிறது. அவர் அமெரிக்காவில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. நடிகர் சங்கத்துக்கும், ரஞ்சிதாவுக்கு தொடர்பே இல்லை என்பது போல நடிகர் சங்க நிர்வாகிகள் மறுத்துவிட்ட நிலையில், நித்தியானந்தாவும், தனக்கும் ரஞ்சிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல வாக்குமூலம் அளித்திருக்கிறார். ரஞ்சிதாவின் நிலைமைதான் இப்போது பரிதாபகதியாகி விட்டது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்
நன்றி தினமலர்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil