“எனக்கு வழிகாட்டி எனது அப்பாதான்..!” – நடிகர் விஜய் உருக்கம்..!

06 May 2010 ·

“எனக்கு வழிகாட்டி எனது அப்பாதான்..!” – நடிகர் விஜய் உருக்கம்..!

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரித்து வரும் வெளுத்துக் கட்டு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆடியோவை ரிலீஸ் செய்துவிட்டு பேசிய விஜய், “எனது ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்தி, ரசிகர்களுக்கு நல்வழி காட்டியதில் என் அப்பாவுக்கு நிறைய பங்கு உண்டு” என்று கூறியுள்ளார்.

அந்த விழாவில் பேசிய விஜய் ``எங்க அப்பா எப்போதுமே ஓடுகிற குதிரையில் சவாரி செய்வதை விரும்ப மாட்டார். அவராகவே புது குதிரைகளை உருவாக்கி, அதில் சவாரி செய்வதையே விரும்புவார். அவர் புதுமுகங்களை வைத்து படம் பண்ணி, நிறைய வெற்றிகளை கொடுத்து இருக்கிறார்.

விஜயகாந்த், ரகுமான், நான்(விஜய்) போன்றவர்கள் அப்பாவின் கண்டுபிடிப்புகள்தான். சிம்ரனைக்கூட `ஒன்ஸ்மோர்` படத்தில் அப்பாதான் அறிமுகம் செய்தார். இந்த படத்தில் கதிர், அருந்ததி என்ற இரண்டு பேர்களை அறிமுகம் செய்து இருக்கிறார்.

எங்க அப்பாவின் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது. எனக்கு எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், முதலில் எங்க அப்பாவிடம்தான் விவாதிப்பேன். என் ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்தி, ரசிகர்களுக்கு நல்வழி காட்டியதில், அப்பாவுக்கு நிறைய பங்கு உண்டு.

அவரை ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி, நான் கூறி வருகிறேன். ``சூரியன் ஓய்வா எடுக்கிறது? காற்று ஓய்வா எடுக்கிறது?`` என்று என்னிடம் அவர் கேட்கிறார். தொடர்ந்து படம் எடுத்து வருகிறார்.``

இவ்வாறு விஜய் பேசினார்.

1 comments:

Anonymous said...
May 12, 2010 at 4:41 PM  

My name is Gregory Kennedy I was browsing internet and found your blog. The author did a great job. I will subscribe to your RSS feeds. Thank you for your contribution. I am a web designer myself. And here some examples of the websites that I designed for payday loan canada online payday loans company.

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil