ஸ்நேகா-தீபிகோ படுகோனே இடையே கூந்தல் போர்..!

13 May 2010 ·

ஸ்நேகா-தீபிகோ படுகோனே இடையே கூந்தல் போர்..!

தமிழ் நடிகை ஸ்னேகாவுக்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கும் கடும் மோதல் தொடங்கியிருக்கிறது. இது குடுமிபிடிச் சண்டையல்ல... கூந்தல் போர்!

இந்தியாவில் ஹேர் ஆயில் எனப்படும் கூந்தல் எண்ணெய் - பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்- மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. இதன் ஆண்டு சந்தை மதிப்பு மட்டும் ரூ 750 முதல் 900 கோடி. இந்த சந்தையில் மார்க்கெட் லீடராக கடும் மோதலில் இறங்கியுள்ளன பல எண்ணெய் நிறுவனங்கள்.

இதற்காக பல புதுமையான, கவர்ச்சியான மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஹேர் ஆயில் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான டாபர் ஆம்லா, தனது டாபர் ஆம்லா, நெல்லி ஹேர் ஆயில் விளம்பரத் தூதராக ஸ்னேகாவை ஒப்பந்தம் செய்து, பல விளம்பரப் படங்களை எடுத்துள்ளது. பத்திரிகைகள், டிவிக்களிலெல்லாம் ஸ்னேகா, தனது இயற்கையான கருங்கூந்தலை விரித்துவிட்டபடி புன்னகைத்து மயக்கியவண்ணம் உள்ளார்.

இதற்குப் போட்டியாக, தீபிகாவை படுகோனேவை களமிக்கியுள்ளது மரிகோ நிறுவனம், தனது புகழ்பெற்ற பிராண்டான பாரசூட் தேங்காய் எண்ணெய்க்காக.

பொதுவாக தென்னிந்தியாவில்தான் ஹேர் ஆயில் உபயோகம் அதிகம் என்கிறது நுகர்வோர் சந்தை ஆய்வுகள். அந்த மார்க்கெட்டைப் பிடித்துவிட வேண்டும் என்பதாலேயே ஸ்னேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் டாபர் நிறுவனத்தினர்.

இந்த சந்தைப் போரில் எந்த நடிகையின் கொடி பறக்கப் போகிறது.. பார்க்கலாம் என ஆவலுடன் வேடிக்கைப் பார்க்கும் பிற நிறுவனங்கள், சத்தமின்றி தங்களுக்கும் ஒரு கவர்ச்சி நாயகியை விளம்பரத் தூதராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அசின், பிரியங்க சோப்ராவெல்லாம் இதற்காகவே காத்திருக்கின்றபோது தலைவிரி கோலமாக நிறைய நடிகைகளை விளம்பரங்களில் இனி நாம் காணலாம்..!

1 comments:

www.thalaivan.com said...
May 14, 2010 at 2:10 AM  

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil