காட்டுக்குள்ளே கதகளி

09 May 2010 ·


மிழ் 'ராவணன்' படத்தின் கதை - பிரித்விராஜ் நேர்மையான போலீஸ் அதிகாரி. கிளாஸிக்கல் டான்ஸரான ஐஸ்வர்யா ராயைக் காதலித்து மணந்துகொள்கிறார். திருமணம் ஆனவுடன் வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யப்படும் பிரித்விராஜ், அங்கே மனைவி ஐஸ்வர்யாவுடன் செட்டில் ஆகிறார். அந்த ஊரில் போலீஸ், சட்டம் எதுவும் செல்லுபடி ஆகாது. பழங்குடி இன மக்கள் அதிகம் வசிக்கும் அந்த ஊரின் தலைவன் விக்ரம்தான் அங்கே எல்லாம். தலைவன் கதையை முடித்தால்தான் ஊரில் சட்டம் - ஒழுங்கைக் கொண்டுவர முடியும் என்று விக்ரமைத் தேடிக் காட்டுக்குள் நுழைகிறார் பிரித்விராஜ். காட்டுக்குள் ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரித்விராஜ் மூவருக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் கதை!

நக்சலைட்டுகளைப்பற்றிய கதை அல்ல என்று இந்தப் படத்தைப்பற்றி மணிரத்னம் மறுத்தாலும், இது நக்சலைட் தலைவரான கோபத் காண்டே பற்றிய படம் என்கிற பேச்சும் இருக்கிறது! ஒகேனக்கல் ஷூட்டிங்கின்போது 90 அடி உயரத்தில் இருந்து தண்ணீருக்குள் குதித்திருக்கிறார் அபிஷேக் பச்சன். மனைவி ஐஸ்வர்யா ராய் பயந்தும், டைரக்டர் மணிரத்னம் தயங்கியும், 'அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது' என இன்ஷூரன்ஸ் கம்பெனி கைவிரித்த பிறகும் 90 அடி உயர டைவ் அடித்திருக்கிறார் அபிஷேக் படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி ஒரு பாலத்தில் நடக்கும். பாலம் செட் என்பதால் தமிழ், ஹிந்தி இரண்டு சண்டைக் காட்சிகளையும் சீக்கிரம் எடுத்துவிட வேண்டும். நீண்ட நேரத்துக்குப் பாலம் தாங்காது என்பதால், தமிழில் வீராவாகவும், ஹிந்தியில் தேவ்-ஆகவும் ஒரு மணி நேரத்தில் மாறி சண்டைக் காட்சியை முடித்துக்கொடுத்திருக்கிறார் விக்ரம்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil