நவீன தொழில்நுட்பம் – பெண்களே எச்சரிக்கை !

03 May 2010 ·

சிறிது நாளைக்கு முன் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். ஆசிரியப்பயிற்சி பயிலும் ஒரு மாணவன் கல்லூரி பாத்ரூமில் உடன் படிக்கும் மாணவியை தவறான முறையில் செல்பேசி மூலம் படமாக எடுத்து நண்பர்களுக்கு காட்டியது மட்டுமன்றி இணையத்திலும் போட்டு விட்டான்.அந்த மாணவியின் நிலையை நினைத்துப்பாருங்கள்.இதில் கொடுமை என்னவென்றால் இருவரும் காதலர்களாம். இதே போல் ஒரு பள்ளியின் படிக்கட்டிலேயே வைத்து பிளஸ்டூ படிக்கும்....

இதை விட இன்னொரு சம்பவம். காஞ்சிபுரம் கோயில் குருக்களின் காமக்கொடுரம். நான்கு பெண்களை கோயிலிலேயே வைத்து மனதைக்கெடுத்து அந்தரங்கத்தை படமாக எடுத்தது தான். இவற்றை எல்லாம் மிஞ்சிய விடியோக்கள் எல்லாம் இணையத்தில் பரவிக்கிடைக்கின்றன. எல்லாவற்றையும் கவனியுங்கள். பெண்கள் தான் ஏமாந்தோ அல்லது அலட்சியமாகவோ இருந்து உள்ளனர்.

இப்படி படம் எடுக்க உதவும் செல்பேசிகள் சந்தையில் 2000 ருபாய்க்கே கிடைக்கின்றன.அதுவும் தெளிவாக படம் எடுக்கும் வசதியோடு.மேலும் உளவு பார்க்கும் Spy Cameras மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.இவை பட்டன் வடிவிலோ பேனா மூடி வடிவிலோ மேலும் கண்ணுக்கு புலப்படாத வடிவில் கூட கிடைக்கின்றன. இவற்றை வைத்து படம் எடுப்பது சுலபமான வேலை தான். இவற்றைப்பற்றிய அதிர்ச்சியான விபரங்களுக்குhttp://aakayam.blogspot.com/2010/05/blog-post_4850.html கட்டுரையை காணுங்கள்.


பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

• இணையம் பயன்படுத்த வெளியில் நெட்கஃபேகளுக்கு செல்லும் போது கணிணியின் மேல் வைத்திருக்கும் வெப் கேமராவின் கண்கள் உங்களுக்கு தெரியாமல் படம் பிடிக்கலாம்.இந்த மாதிரி மாட்டுகிற பெண்கள் அதிகம்.எனவே அங்கே சென்று மகிழ்வதை நிறுத்துங்கள்.

• எங்கேனும் ஹோட்டல்களில் தங்க நேர்ந்தால் படுக்கைக்கு அருகில் கேமரா இருக்கிறதா என்று நன்றாக பார்த்து விடவும். கூடவே பாத்ரூமிலும் பாருங்கள்.பொது கழிப்பறைகள், துணிமாற்றும் அறைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போதும் கவனமாக இருங்கள்.

• உங்கள் காதலரோ அல்லது கணவரோ விளையாட்டாய் படம் பிடிக்கறதாய் இருந்தால் கூட அனுமதிக்காதிர்கள்.அழித்து விடலாம் என்று சொல்வார்கள்.ஒருவேளை அவர்கள் உண்மையாக இருந்தால் கூட இப்போது அழித்ததை மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் நிறைய உள்ளன. மொபைலை கடைகளில் வேலையாக கொடுக்கும் போது அவர்கள் மீட்டு எடுத்து வெளியிட வாய்ப்புள்ளது.

• காமுகர்கள் எல்லாம் காதல் என்ற பெயரில் தான் மோசம் செய்கின்றனர்.இளம்பெண்கள் காதலிக்கும் போது கவனமாக இருங்கள். எங்கேனும் வெளியில் அழைத்தால் தள்ளி ப்போடுங்கள். பாசமாக பேசுகிறவர்கள் கூட் வில்லனாக இருப்பார்கள். ஒருபோதும் எதையும் படமாக எடுக்க அனுமதிக்காதிர்கள்.உங்களுக்கு தெரியாமலே படம் எடுத்து உங்களை மிரட்டக்கூட வாய்ப்புண்டு.

• பொது இடங்களில் உங்கள் உடைகள் சரியாக உள்ளதா என்றும் சரிபார்க்கவும். எங்கே கேமரா இருக்கும் என்றே இப்போது சொல்ல முடிவதில்லை.உடைகள் கலைந்த நிலையில் பிடிக்கப்பட்ட படங்கள் நிறைய உலவுகின்றன. உங்கள் குளியல் அறையில் கூட இருக்கலாம். உங்களுக்கு மிக நெருக்கமானவர்கள், பக்கத்துக்கு வீட்டு நபர்களால் கூட வைக்கப்பட்டு அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுகாட்டலாம்.

• பெற்றோர்களும் தங்களது பெண்கள் பாசம் கலந்த அக்கறை கொள்ள வேண்டும். இயல்பான நடத்தையில் மாற்றம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.அதிக நேரம் சாட்டிங் செய்வது , மொபைலில் பேசுவது போன்றவை இருந்தால் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். அவர்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

• எளிதில் யாரையும் நம்பாதிருங்கள்.உங்களுக்கு பிடித்தமானவர்கள் கூட பழிவாங்கலாம்.முன்னரே எச்சரிக்கையாக இருந்தால் பின்னால் ஆபத்து இல்லை தானே!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil