அஜீத்... எப்போதும் ஆச்சர்யம்! 'மொராக்கோ ரேஸ் விபத்தில் நூலிழையில் தப்பித்தார்!' என்று செய்திகள் பரபரத்துக்கிடந்த நாளின் நள்ளிரவில், 'அஜீத் காலிங்' என்று ஒளிர்ந்தது மொபைல்! ''ரேஸ் ரேஸ்னு பறந்துட்டே இருப்பதால், அனோஷ்காவையும் ஷாலினியையும் ரொம்பவே மிஸ் பண்றேன். இதோ, அடுத்து இத்தாலி போகணும். நடுவில் ரெண்டு நாள் கேப் கிடைச்சது. உடனே, கிளம்பி சென்னைக்கு வந்தேன். இந்த வருஷம் என் பிறந்தநாளின் போதுகூட அவங்க ரெண்டு பேரும் என் பக்கத்தில் இல்லை!'' என அஜீத் அன்று பேசியது அத்தனையும் அவர் மனதுக்கு நெருக்கமான, விருப்பமான விஷயங்கள் மட்டுமே! 'என்னாச்சு, மொராக்கோ ரேஸில்?'' ''இந்த வருஷம் ஃபார்முலா-2 சீஸன் ரொம்பவே நல்லா ஆரம்பிச்சது. அன்னிக்கு ரேஸ்ல திடீர்னு எனக்கு ரொம்ப முன்னாடி போயிட்டு இருந்த கார் ஒண்ணு எகிறிப் பறந்து இன்னொரு கார் மேல மோதிருச்சு. பெட்ரோல் பத்திட்டு எரிய ஆரம்பிச்சு, இன்னொரு காரும் அதில் மோத... பயங்கர விபத்து. நான் கொஞ்சம் பின்னாடி இருந் ததால், ஸ்பீட் கன்ட்ரோல் பண்ணி எதிலும் மோதாம பாஸ் பண்ணிட்டேன். 100 அடி முன்னாடி என் கார் இருந்திருந்தா... மை காட்!'' எப்போ ரேஸில் திரும்பக் கலந்துக்கணும்னு முடிவெடுத்தீங்க?'' ''பத்மஸ்ரீ விருது கிடைச்சதுக் காக நரேன் கார்த்திகேயனைப் பாராட்டி ஒரு பார்ட்டி. அப்போ, சென்னை எம்.ஆர்.எஃப். ரேஸ் பத்தி நிறைய சொல்லிட்டு, 'நீங்க கலந்துக்கிறீங்களா?'ன்னு கேட் டார். என் மனசு 'ஓ.கே' சொல்லிடுச்சு. பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமத்தான் கலந்துக்கிட்டேன். ஏழாவது இடம் வந்தேன். உற்சா கத்தில், உள்ளுக்குள் ஒளிஞ்சுட்டு இருந்த ரேஸ் வெறி திரும்ப குதிரை ஏறிடுச்சு. நரேன் கார்த்தி கேயன், என்னை யுரேஷியா மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவ னத்தின் பியர்ஸ் ஹன்னி செட்டி டம் அறிமுகப்படுத்தினார். அவர் தான் இப்போ என் ரேஸ் குரு!' ''ஏற்கெனவே ஃபார்முலா-1 ரேஸர் கரூண் சந்தோக் போதிய ஸ்பான்சர்கள் இல்லாமல் திணறிட்டு இருக்கார். அந்த நிலைமை உங்களுக்கு வரலாம் இல்லையா?'' ''வரலாம் இல்லை... ஏற்கெனவே வந்திருச்சு பாஸ்! ஸ்பான்சர்ஸ் யாரும் கிடைக்கலை. நரேன் கார்த்திகேயன், கரூண் சந்தோக், அர்மான் இப்ராஹிம், பார்த்தீவ் சுரேஷ்வரன், ஆதித்யா பட்டேல், இப்போ நான்... இப்படி இதுவரை இந்தியா சார்பாக சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுப்பவர்கள் எல் லோருமே தமிழ்நாட்டுக்காரர்கள் தான். இந்த ஒரு காரணத்துக் காகவே தமிழக அரசு, ரேசுக்கு உதவலாம். கூடவே, பெரிய எம்.என்.சி. நிறுவனங்களிடம் தமிழக ரேஸர்களுக்கு ஸ்பான்சர் செய்யச் சொல்லி அறிவுறுத்தலாம். அது நடந்தா, ரொம்பப் பெரிய புண்ணியமா இருக்கும். இப்போ இன்டர்நேஷனல் ரேஸ்ல கலந்துகொள்ளும் எல்லா ரேஸ் வீரர்களும் பிச்சை எடுத்துட்டு இருக்கோம். எனக்கு இந்த வருஷம் மட்டும் ரேஸ்ல கலந்துக்க நாலு லட்சம் பவுண்டு வேணும். ஒரு இங்கிலாந்து பவுண்டு கிட்டத்தட்ட 69 ரூபாய். சீக்கிரமே அது 80 ரூபாய் ஆகலாம். இது ரொம்ப காஸ்ட்லி விளையாட்டு சார். அரசாங்கம் நினைச்சாதான் ஆர்வமுள்ள, பண வசதி இல்லாத, திறமைசாலி இளைஞர்களை ரேஸர்கள் ஆக்க முடியும்!'' ''ஆனா, இதுவரை நீங்க கலந்துக்கிட்ட எல்லா ரேஸிலும் கிட்டத்தட்ட கடைசி இடம்தான் பிடிக்கிறீங்க... என்ன காரணம்?'' ''இப்ப எனக்கு 39 வயசு. ஃபார்முலா-2 ரேஸ் ஓட்டுபவர்களில் எனக்குத்தான் வயசு ஜாஸ்தி. அவங்க எல்லாருமே ஆறு வயசுல இருந்தே பக்கா பயிற்சி எடுத்து 20 வயசுக்குள் சர்வதேசப் போட்டி களில் கலந்துக்குறாங்க. ஆனா, நான் ஆறு வருஷம் பிரேக் விட்டுட்டு இப்போதான் திரும்ப வந்திருக்கேன். உடனே, ரிசல்ட் கிடைக்கும்னு சொன்னா, என்னையே நான் ஏமாத்திக்கிறேன்னுதான் அர்த்தம். படிப்படியாதான் முன்னேறணும். மெதுவா நடந்தாலும் எப்பவும் பின்நோக்கி மட்டும் நடக்க மாட்டேன்!'' ''அனோஷ்கா என்ன சொல்றாங்க?'' ''என் டார்லிங்! டி.வி-யில் எந்த காரைப் பார்த்தாலும், 'அப்பா கார்... அப்பா கார்'னு குதிக்கிறா. அதே மாதிரி ஷாலினியோ, நானோ டி.வி-யில் வந்தால், 'அம்மா படம்... அப்பா படம்'னு ஜாலியா ஓடி வந்து மடில தொத்திக்குவா. நான் ரொம்பக் கொடுத்துவெச்சவன்னு ஒவ்வொரு நிமிஷமும் என்னை உணரவெச்சுட்டே இருக்கா அனோஷ்கா!'' ''நீங்க நடிக்கிற படங்கள் சரியா ஓடலைன்னுதான் ரேஸ் பக்கம் திரும்பிட்டீங்கன்னு இங்கே பேசிக்கிறது தெரியுமா?'' ''கொஞ்சம் உண்மை சொல்லவா பாஸ்? நான் இதுவரை நடிச்ச அத்தனை படங்களிலும் என்னோட 100 சதவிகித உழைப்பைக் கொடுத்துத்தான் நடிச்சிருக்கேன். ஆனா, அதில் பல படங்கள் ஹிட் ஆகலைன்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. தொடர்ந்து மட்டமான, குப்பையான படங்களா நடிச்சு என் ரசிகர்களை நான் ஏமாத்த விரும்பலை. அதுவும் இப்போ தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறது பெரிய செலவு பிடிக்கிற விஷயம். அவ்வளவு காசு செலவழிச்சு தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் யாரும் நிச்சயம் குப்பையான படங்கள் பார்க்க விரும்பமாட் டாங்க. என்னைப் பொறுத்தவரை, மட்டமான படங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடிக் கோடியாச் சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜீத் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்குச் சந்தோஷம்தான் சார் முக்கியம்!'' ''அப்போ இனி சினிமா?'' ''சந்தேகமே வேண்டாம். தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். ஆனால், வருஷத்துக்கு ஒரு படம் நடிச்சாலும் நல்ல படமா நடிக் கணும். இப்போ தயாநிதி அழகிரியின் 'கிளவுட் நைன் மூவி'சுக்காக ஒரு படம் பண்றேன். கௌதம் சார் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கார். செப்டம்பர்ல ரேஸ் முடிஞ்சதும் அக்டோபர்ல ஷூட்டிங் ஆரம்பிக்கும்!'' 'அஜீத் அரசியலுக்கு வரப்போறார்'னு ஒரு பேச்சு இருக்கே... அஜீத்குமார் அரசியல்வாதி ஆவாரா?'' ''இப்போ நான் அரசியல்வாதி இல்லைன்னு யார் சொன்னது? இப்பவும் எப்பவும் அரசியல் என்னைச் சுத்தி இருந்துட்டேதான் இருக்கு பாஸ். சினிமா இண்டஸ்ட்ரி முழுக்கவே பாலிடிக்ஸ்தான். கருணையே இல்லாத அந்த இண்டஸ்ட்ரியில் ஒருத் தன் சர்வைவ் பண்ணணும்னா, அவனுக்கு நிச்சயம் அரசியல் தெரிஞ்சிருக்கணும். சினிமாவில் எந்த காட்ஃபாதரும் இல்லாம 18 வருஷம் சமாளிச்சு நிக்க, சாதிக்க, நானும் எப்பவோ அரசியல்ல இறங்கிட்டேன் பாஸ். ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கு. அரசியல் இல்லாத ஒரு இடம்கூட இந்த உலகத்தில் இல்லை. அரசியல் இல்லாத மனுஷன் யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அஜீத் மட்டும் அரசியலில் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?'' - குறும்பாகச் சிரிக்கிறார் அஜீத்!இப்போ நான் அரசியல்வாதி!'' அஜீத் - ஷாலினி - அனோஷ்கா... ரொம்ப பெர்சனல் ஆல்பம்!
vote --போட மறக்கதீங்க
-vikatan
இப்போ நான் அரசியல்வாதி!'' அஜீத் - ஷாலினி - அனோஷ்கா... ரொம்ப பெர்சனல் ஆல்பம்!
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment