இந்தியில் ஹீரோயின் சான்ஸ் போச்சு..! அசின் கண்ணீர்..!
தமிழில் சூர்யா, ஜோதிகா நடித்த படம் காக்க காக்க. தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு இப்படம்தான் புது வாழ்வு கொடுத்தது. இப்போது இப்படத்தை இந்தியில் ரீமேக்குகிறார்கள். ஜான் ஆப்ரகாம்தான் ஹீரோ.
படத்தில் ஹீரோயினாக நடிக்க அசினை தேர்வு செய்துவைத்திருந்தார் இயக்கப் போகும் விபுல் ஷா. ஆனால் இப்போது ஆசின் படத்தில் இல்லையாம். காரணம், ஜான் ஆப்ரகாம்தான் அசின் வேண்டாம் எனக் கூறி விட்டாராம்.
இதற்கு ஜான் ஆப்ரகாம் சொன்ன காரணம் கிட்டத்தட்ட கஜினி சாயலில் காக்க காக்க படமும் இருக்கிறது. இரண்டும் வேறு வேறு கதை என்றாலும்கூட கஜினியின் நிழல் காக்க காக்க படத்திலும் உள்ளது. ஏற்கனவே இந்தி கஜினியில் அசின் நடித்து விட்டார். இப்போது இதிலும் நடித்தால் சரியாக இருக்காது என்று பீல் பண்ணுவதாக விபுலிடம் கூறியுள்ளார்.
ஆனால் விபுலுக்கோ அசினைத்தான் போட வேண்டும் என ஆசை. ஏற்கனவே அவரது லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் ஆசின்தான் நாயகியாக நடித்திருந்தார். அந்த அனுபவத்தால் இந்தப் படத்திலும் அசினை புக் செய்ய ஆர்வமாக இருந்தார். ஆனால் ஹீரோ வேறு மாதிரியாக நினைத்ததால் வேறு வழியில்லாமல் அசினிடம் ஸாரி சொல்லி விட்டாராம் விபுல்.
அதைக் கேட்டதும் அசினுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து விட்டதாம். தன்னைப் போய் ஜான் நிராகரித்துவிட்டாரே.. அதுவும் நல்ல நண்பராக இருந்து கொண்டு இப்படிச் சொல்லிவிட்டாரே என்று நெருக்கமானவர்களிடம் புலம்பித் தீர்த்து விட்டாராம்.
0 comments:
Post a Comment