விளம்பரப் படங்கள் வேண்டாம்-நயன்தாரா

13 June 2010 ·

இன்று பல நடிகைகளுக்கு சினிமாவில் நடிப்பதைவிட, விளம்பரங்களில் நடிப்பதில்தான் செமத்தியான வருமானம்.

அசினும் த்ரிஷாவும் ஆளுக்கொரு கூல் டிரிங்க் பிராண்டைப் பிடித்து உலுக்க கோடி கோடியாகக் கொட்டுகிறது பணம்.

இந்தச் சூழ்நிலையில், அண்மையில் ஒரு பிரபல விளம்பர நிறுவனம் தங்களுடைய தயாரிப்புகளுக்கு விளம்பர மாடலாக இருக்க ரூ.1 கோடி சம்பளம் தருகிறோம் என நடிகை நயன்தாராவிடம் பேச்சு நடத்தியுள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை, கொஞ்சமும் தயக்கமின்றி நயன்தாரா மறுத்துவிட்டார் என்று செய்திகள் வந்தன.

இது குறித்து கேட்டதற்கு, "விளம்பரப் படங்களில் நடிப்பதில்லை என்பது அவருடைய கொள்கை. ஒரு முறை முடிவு செய்தால் அதிலிருந்து பின் வாங்குபவள் நான் அல்ல. வேண்டாம் என நான் முடிவு செய்த பிறகு, எத்தனை கோடி சம்பளம் வந்தால்தான் என்ன? நாம் பயன்படுத்தாத ஒரு பொருளை மற்றவர்களை வாங்கிப் பயன்படுத்த சொல்வது எந்த வகையிலும் நியாயமாக இருக்காது என்பதுதான் எனது கருத்து..." என்றார்.

நூத்துல ஒருத்தங்களுக்குத்தான் இது மாதிரி மனசு வரும்..!

1 comments:

Software Engineer said...
June 13, 2010 7:52 AM  

அன்பு பதிவாளரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்த்து கமெண்ட் போடவும். நன்றி!

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Recent Comments

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil