தொழில் அதிபருடன் நடிகை அனுஹாசன் நிச்சயதார்த்தம்

அனுஹாசனுக்கு 10 வருடங்களுக்கு முன்பு விகாஸ் என்பவருடன் திருமணம் நடந்தது. அது காதல் திருமணம். விகாஸ், ராணுவத்தில் பணிபுரிந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விகாசை விட்டு அனுஹாசன் பிரிந்தார். பின்னர், இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்கள்.
அதன் பிறகு அனுஹாசன், டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தோன்றினார். `காபி வித் அனு` என்ற நிகழ்ச்சியை அவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அனுவுக்கும், லண்டன் தொழில் அதிபர் கிரஹாம் என்பவருக்கும் இடையே `இணையதளம்` மூலம் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு, பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தார்கள்.
அதைத் தொடர்ந்து அனுஹாசன்-கிரஹாம் நிச்சயதார்த்தம், திருச்சியில் நடந்தது. அதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த தகவலை அனுஹாசன், `ஜஸ்ட் பார் உமன்` என்ற ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
0 comments:
Post a Comment