கேரியர் கைடன்ஸ்

23 April 2010 ·


கேரியர் கைடன்ஸ்

1,095 சப்-இன்ஸ்பெக்டர்கள்!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேரடி நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலி இடங்கள்: 1,095. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு. வயது: 20-28. விண்ணப்பிக்க கடைசி தேதி: 3.05.2010.

விவரங்களுக்கு: www.tn.gov.in/tnusrb.

கணினி கற்றோருக்கு...

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும்அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் குழுமத்தில் காலி இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்கள்: செக்ஷன் ஆபீஸர், அசிஸ்டென்ட். காலி இடங்கள்: 123. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப் படிப்பு. கம்ப்யூட்டரை இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது:அதிகபட்சம் 28. விண்ணப்பத்தின் மாதிரியை அறிந்து கொள்ள: www.csir.res.in

கடற்படை பைலட்!

இந்தியக் கடற்படையின் பைலட் கேடரில் குறுகிய கால அடிப்படையில் பயிற்சியுடன் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: அங்கீ கரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப் படிப்பு. மேலும் ப்ளஸ் டூவில் கணிதம் மற்றும் இயற்பியலை முதன்மைப் பாடமாகப் படித்திருக்க வேண்டும். வயது: 19-23. விண்ணப்பங்கள் சென்றடைய கடைசித் தேதி: 5.07.2010.

விவரங்களுக்கு: www.nausenabharti.nic.in.

ஹோமியோபதி மருத்துவராக...

இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கொல்கத்தா, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோமியோபதி நிறுவனத்தில் 2010-2011ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் சர்ஜரி (பி.ஹெச்.எம்.எஸ்.,) படிப்புக்கு இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு ஜூன் 6-ம் தேதிநடத்தப்படுகிறது. இந்தப் படிப்பின் கால அளவு ஐந்து வருடங்கள் ஆறு மாதங்கள். மொத்தம் 93 இடங்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை, புதுடெல்லி உள்ளிட்ட ஏழு தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும். கல்வித் தகுதி: ப்ளஸ் டூ படிப்பில்இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்www.nih.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்!

எம்.எஸ்ஸி., தகவல் தொழில்நுட்பம்!

இந்தியாவில் உள்ள சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மேனேஜ்மென்ட், (ஐ.ஐ.ஐ.டி. எம்கே.) எம்.எஸ்ஸி., தகவல் தொழில்நுட்பம் படிப்புக்க£ன சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதிகள்: பி.இ., அல்லது எம்.சி.ஏ.,படிப்புகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை www.iiitmk.ac.in என்ற இணையதள முகவரியில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை 2010, மே 17-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்!

உதவித்தொகையுடன் பி.ஹெச்டி

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத் தொடர்பியல் துறை மற்றும் மின் ஊடக ஆய்வு மையத்தில் 12 மாணவர்களுக்கு மாத உதவித்தொகையுடன் பி.ஹெச்டி படிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏப்ரல் 28-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.

தகுதி குறித்த விவரங்களுக்கு: www.pondiuni.edu.in


நன்றி விகடன்


0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil