புதிய அமைச்சரவை பதவியேற்றது; 37 அமைச்சர்கள், 39 பிரதி அமைச்சர்கள்

23 April 2010 ·

புதிய அமைச்சரவை பதவியேற்றது; 37 அமைச்சர்கள், 39 பிரதி அமைச்சர்கள்


சிறிலங்காவின் புதிய அமைச்சரவை இன்று பிற்பகல் நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 37 அமைச்சர்களும், 39 பிரதி அமைச்சர்களும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் இன்று பிற்பகல் பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சரவையில் இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கடசியின் சார்பில் முத்து சிவலிங்கம் பிரதி அமைச்சராகவே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை விநாயகமூர்த்தி முரளீதரனும் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு:

01. பிரதமர் டி.எம்.ஜெயரட்ண- பௌத்த மற்றும் சமய விவகார அமைச்சர்.
02. ரட்ணசிறி விக்கிரமநாயக்க- அரச முகாமைத்துவ மற்றும் மீளமைப்பு அமைச்சர்.
03. நிமால் சிறிபால டி சில்வா- நீர்ப்பாசன அமைச்சர்.
04. ஏ.எச்.எம்.பௌசி- அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்.
05. மைத்திரிபால சிறிசேன- சுகாதார அமைச்சர்.
06. சுசில் பிறேம்ஜெயந்த- பெற்றோலியத்துறை அமைச்சர்.
07. தினேஸ் குணவர்த்தன- நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்.
08. டக்ளஸ் தேவானந்தா- மரபுசார் தொழிற்துறை மற்றும் சிறுகைத்தோழில் அமைச்சர்.
09. அதாவுல்லா- மாகாணசபைகள், உள்ளுராட்சி அமைச்சர்.
10. டியூ.குணசேகர- புனர்வாழ்வு அமைச்சர்
11. றிசாத் பதியுதீன்- கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்.
12. விமல் வீரவன்ச- கட்டுமான, பொறியியல், வீடமைப்பு அமைச்சர்.
13. பசில் ராஜபக்ச- பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்.
14. சம்பிக்க ரணவக்க- சக்தி, மின்சக்தி அமைச்சர்.
15. பி.தயாரத்ன- அரச வளங்கள் மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சர்
16. ஜி.எல்.பீரிஸ்- வெளிவிவகார அமைச்சர்.
17. ஜோன் செனிவிரத்ன- பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்.
18. சுமேதா ஜெயசேன- நாடாளுமன்ற விவகார அமைச்சர்.
19. மில்றோய் பெர்னான்டோ- மீள்குடியேற்ற அமைச்சர்.
20. ஜீவன் குமாரதுங்க- அஞ்சல் தொலைத்தொடர்புகள் அமைச்சர்.
21. பவித்ரா வன்னியாராச்சி- தேசிய மரபுரிமைகள், கலாசார அமைச்சர்.
22. அனுர பிரியதர்சன யாப்பா- சுற்றாடல்துறை அமைச்சர்.
23. திஸ்ஸ கரலியத்த- சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் விவகார அமைச்சர்.
24. அதாவுட செனிவிரத்ன- நீதி அமைச்சர்.
25. காமினி லொக்குகே- தொழிலுறவுகள் அமைச்சர்.
26. பந்துல குணவர்த்தன- கல்வி அமைச்சர்.
27. மகிந்த சமரசிங்க- தோட்டத்தொழிற்துறை அமைச்சர்.
28. ராஜித சேனாரத்ன- கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர்.
29. பியசேன கமகே- சுதேச மருத்துவத்துறை அமைச்சர்.
30. எஸ்.பி.நாவின்ன- தேசிய மொழிகள் மற்றும் சமூக சமத்துவ அமைச்சர்.
31. ஜனக பண்டார தென்னக்கோன்- காணி அமைச்சர்.
32. பீலிக்ஸ் பெரேரா- சமூகசேவைகள் அமைச்சர்.
33. சி.பி.இரத்னாயக்க- விளையாட்டுத்துறை அமைச்சர்.
34. மகிந்த யாப்பா அபேவர்த்தன- விவசாய அமைச்சர்.
35. குமார வெல்கம- போக்குவரத்து அமைச்சர்.
36. டலஸ் அழகப்பெரும- இளைஞர் விவகார வேலைவாய்ப்பு அமைச்சர்.
37. ஜோன்ஸ்டன் பெர்னான்டோ- கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர்.

பிரதிஅமைச்சர்களின் விபரம் வருமாறு:

01. சாலிந்த திசநாயக்க-
02. டிலான் பெரேரா-
03. சுசந்த புஞ்சிநிலமே-
04. லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன-
05. சந்திரசிறி கஜதீர-
06. ஜெகத் புஸ்பகுமார-
07. ரி.பி.எக்கநாயக்க-
08. மகிந்த அமரவீர-
09. றோகித அபேகுணவர்த்தன-
10. சந்திரசேன-
11. குணரத்ன வீரக்கோன்-
12. மேர்வின் சில்வா-
13. பண்டு பண்டாரநாயக்க-
14. ஜெயரத்ன ஹேரத்-
15. தயாசிறித திசேரா-
16. துமிந்த திசநாயக்க-
17. ரஞ்சித் சியம்பலாபிட்டிய-
18. லசந்த அழகியவன்ன-
19. றோகண திசநாயக்க-
20. மித்ரபால-
21. நிர்மலா கொத்தலாவல-
22. பிறேமலால் குணசேகர-
23. கீதாஞ்சன குணவர்த்தன-
24. விநாயகமூர்த்தி முரளீதரன்-
25. இந்திக பண்டாரநாயக்க-
26. முத்து சிவலிங்கம்-
27. சிறிபால கம்லத்-
28. எக்கநாயக்க-
29. சந்திரசிறி சூரியாராச்சி-
30. நியோமல் பெரேரா-
31. சரத் குணரத்ன-
32. நந்திமித்ர எக்கநாயக்க-
33. நிருபமா ராஜபக்ஸ-
34. லலித் திசநாயக்க-
35. சரண குணவர்த்தன-
36. றெஜினோல்ட் குரே-
37. விஜித விஜயமுனி சொய்சா-
38. ஹிஸ்புல்லா-
39. வீரகுமார திசநாயக்க-

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil