சின்ன கவுண்டரிடம் சின்ன சின்ன படங்கள் சரண்டர்! கோடம்பாக்கத்துக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது இந்த சரண்டர். எப்படி? சன், கலைஞர் தவிர தமிழ் சினிமாவில் 'சேனல் ரைட்ஸ்' வாங்குகிற டி.விக்கள் எதுவும் நமது அலை வரிசைக்கு எட்டிய தூரம் வரை இல்லை. அப்படியிருக்கிற ஒன்றிரண்டு சேனல்கள் படத்திற்கான தொகையை தவணை முறையில் தருவதுடன், கால் விரல் ரேகை தேய்கிற அளவுக்கு நடக்கவும் விடுகிறார்களாம். இந்த ஏமாற்றம் கேப்டன் டி.வி ஆரம்பிக்கிற வரைதான். இப்போதோ நிலைமை தலைகீழ் என்கிறார்கள். பெரிய படங்களை வளைத்து போடுவதில் வேண்டுமானால் சுணக்கம் காட்டும் கேப்டன் டி.வி சற்றே சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் அட்டென்ஷன் காட்டுகிறதாம். சமீபத்தில் கேப்டன் டி.வி பேசி முடித்திருக்கும் படங்களில் முக்கியமானவை மாயாண்டி குடும்பத்தார் மற்றும் கோரிப்பாளையம் ஆகிய படங்கள். இவ்விரண்டு படங்களுக்கும் ஒரே டைரக்டர் ராசு.மதுரவன்தான். அதுவும் கோரிப்பாளையம் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தே.மு.தி.கவின் முக்கிய பிரமுகர். படம் வாங்குகிறார் என்பது தெரிந்த பிறகும் சும்மாயிருப்பார்களா? பாடல் வெளியீட்டு விழா, படத்துவக்க விழா என்று விஜயகாந்துக்கு வெற்றிலை பாக்கு வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர் கலந்து கொள்ளும் விழா தொடர்பான செய்திகள் மட்டுமல்ல, படமே கூட கேப்டன் டி.வி யில் ஒளிபரப்பாகலாம் என்கிற அளவுக்கு நிலைமையில் படு முன்னேற்றம்
சேனல் ரைட்சும், கேப்டன் டி.வியும்!
சேனல் ரைட்சும், கேப்டன் டி.வியும்!
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment