சச்சின் பிறந்தநாள் : தலைவர்கள், பிரபலங்கள் புகழாரம்!

24 April 2010 ·


சச்சின் பிறந்தநாள் : தலைவர்கள், பிரபலங்கள் புகழாரம்!


கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 37வது பிறந்தநாள் நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நாட்டின் முக்கிய தலைர்களும், பிரபலங்களும் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அவருக்கு இன்று மாலை பிறந்தநாள் கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா நாட்டிற்கு உலக நாடுகள் மத்தியில் தனது கிரிக்கெட் வாழ்க்கை மூலம் பல பெருமைகளை தேடித் தந்துள்ள சச்சினின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்களின் புகழாரம் கங்குலி சச்சின் போன்ற வீரர் நம்முடைய நூற்றாண்டில் கிடைத்திருப்பது நமக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். அவருக்கு நமது நாட்டிற்கு இன்னும் நிறைய ஆண்டுகள் விளையாட வேண்டுமமென்பது என்னுடைய ஆசை. இந்த மகத்தான வீரர் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன். மறக்க முடியாத அனுபவம் : நான் அவரை முதன் முதலில் 14 வயதுக்கு உட்பட மும்பை அணியில் பார்த்தேன். அப்போது நான் பெங்கால் அணிக்கு விளையாடினேன். ஒரு ஞாயிற்றுக் கிழமை பயிற்சி முடிந்த பிறகு நானும் என்னுடைய நண்பனும் உறங்கச் சென்றோம். திடீரென எழுந்து பார்க்கையில் எனது அறை முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருந்தது. என்னுடைய ஷூ, சூட்கேஸ் எல்லாம் தண்ணீரில் மிதக்கிறது. கதவு திறந்து பார்க்கும் போது வெளியில் பக்கெட்டுடன் சச்சினும், வினோத் காம்ளியும். அவர்கள் தான் என் அறையினுள் தண்ணீர் ஊற்றியது. காரணம், அவர்கள் இருவரும் எனது அறையைத் தட்டிப் பார்த்துள்ளார்கள். நான் கதவை திறக்காததால் கோபம் அடைந்து அவர்கள் என் அறையினுள் தண்ணீர் ஊற்றியுள்ளனர். இதுதான் மறக்கமுடியாத அனுபவம். தோனி வயதுதான் அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏறிக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் அவர் இளமையுடன் தான் இருக்கிறார். வயது ஆனாலும் அவருடைய எனர்ஜி இன்னும் அப்படி இருக்கிறது. அவரது ஆட்டத்தை சிறுவயதிலிருந்து பார்த்து தான், நான் வளர்ந்திருக்கிறேன். இப்போது அவருடன் சேர்ந்து விளையாடி வருவது என்னுடைய அதிர்ஷ்டம். மேலும், இன்றைய இளம் வீரர்களுக்கும் அவர் ஒரு ரோல் மாடலாக திகழ்கிறார். அனேகமாக நான் ஒய்வு பெற்ற பிறகும் சச்சின் விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். அவருடைய பேட்டிங் திறன் பற்றி நான் பேசுவதற்கு தேவையில்லை, அது உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மறக்க முடியாத அனுபவம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அவர் உலக சாதனை படைத்த(200* ரன்கள்) போது மறுமுனையில் நான் கட்டித் தழுவியது மறக்காத முடியாது. யுவராஜ்: என்னுடைய தாத்தாவின் பிறந்தநாள். நான் அவரை அன்போடு"கிரண்ட் பா" என்று தான் அழைப்பேன். அவரும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்வார். என்னுடைய ஆல்டைம் சூப்பர்ஸ்டார் அவர் தான். கிரிக்கெட் வரலாற்றில் மூன்று தலைமுறை கண்ட மகத்தான வீரர். அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மறக்க முடியாத அனுபவம்: சமீபத்தில் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நானும், சச்சினும் 200 ரன் பாட்னர் ஷிப் அடித்து இந்தியாவிற்கு வெற்றி தேடிக் கொடுத்தது மறக்க முடியாது ஒன்று. கவாஸ்கர் என்னுடைய செல்லம் சச்சின், என்னுடைய சாதனையை இந்தியர் ஒருவர் முறியடிக்க வேண்டுமென்பது என்னுடைய ஆசை, அதை சச்சின் முறியடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னைப் பொறுத்த வரையில் உலகில் சச்சின் போன்ற சிறந்த வீரர் எவரும் இல்லை. நான் அவரிடம் ஓன்று கேட்டிருக்கிறேன், அது அவர் டெஸ்ட்டில் 20,000 ரன்களைக் கடக்க வேண்டும். அதை நான் நிறைவேற்றுவேன் என சச்சினும் கூறியுள்ளார். நான் அவரை என்னுடைய பிள்ளையைப் போல் தான் பார்க்கிறேன். அவர் நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். மறக்க முடியாத அனுபவம்: என்னுடைய டெஸ்ட் சாதனையை அவர் முறியடித்தது. வினோத் காம்ளி எங்களுடைய நட்பு பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, உங்களுக்கு தெரிந்ததே.. என்னுடைய வாழ்க்கையில் அவர் மிகப்பெரிய தூண். எனக்கு பலமுறை அவர் உதவியுள்ளார். நான் அவருடன் 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறேன். இதுவரை அவர் போன்ற நல்ல மனிதர்களை நான் பார்த்ததில்லை. அவர் என்னுடைய நண்பனாக அமைந்தது நான் செய்த பாக்கியம். அவர் பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். மறக்க முடியாத அனுபவம்: நானும், அவரும் பள்ளிகளுக்குக்கான கிரிக்கெட் போட்டியில் 626 ரன்கள் பாட்னர் ஷிப் அடித்தது என்னால் மறக்க முடியாது. கவுதம் நான் அவரை வாழ்த்துவதற்கு வயதும், அனுபவமும் என்னிடம் இல்லை. அவருடைய ஆட்டத்தின் மீது எனக்கு தீராத காதல். அவருடைய அர்பணிப்பும், எளிமையும் என்னை வியக்க வைக்கிறது. 2011 உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி நமது நாட்டிற்கு நீங்கள் இருக்கும் போதே உலக கோப்பை வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை ஹப்பி பர்த்டே சச்சின். மறக்க முடியாத அனுபவம்: நான் அவருடன் முதன் முறையாக ஓப்பனிங் இறங்கியது என்னால் மறக்க முடியாது. சேவாக் முதலில் என்னுடைய பேட்டிங் ஸ்டைல் அவரைப் போல் இருக்கிறது என்று நிறைய பேர் என்னிடம் சொன்னார்கள், அதை கேட்டு நான் பெருமப்பட்டேன், இப்படி அவரை பார்த்து வளர்ந்து வந்தவன் நான். எனக்கு பலமுறை அவர் பேட்டிங் பற்றி அட்வைஸ் தந்துள்ளார், அப்போது அவருடைய எளிமையைப் பார்த்து வியந்துள்ளேன். அவருக்கு இந்த சிறுவனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்னால் மறக்க முடியாது: 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நானும் அவரும் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றோம் , இதுதான் என்னுடைய மறக்க முடியாத அனுபவம். ஹர்பஜன் சிங் ஒரு மகத்தான வீரர். சச்சினுக்கு ஒய்வே இல்லை... என்னைப் போன்ற வீரர்களை ஊக்குவிப்பதில் அவரை மிஞ்ச எவருமில்லை. எளிமையின் மறுஉருவம் கொண்ட அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மறக்க முடியாத அனுபவம்: ஆஸ்திரேலியாவில் எனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு கடைசி வரை துணை நின்றார். இதுதான் என்னுடைய மறக்க முடியாத அனுபவம். வார்னே கிரிக்கெட்டைப் பொறுத்த வரையில் அவர் எனக்கு எதிரி. காரணம் நான் பந்துவீசும் போது என்னுடைய அனைத்து உத்திகளையும் உடைத்து விடுவார். நான் பார்த்ததிலே அவர் தான் உலகின் தலைசிறந்த வீரர். புகழின் உச்சிக்குச் சென்றாலும், எளிமையைக் கடைப்பிடிக்கும் வீரர். இன்றைய இளைஞர்களுக்கு அவரே ரோல் மாடல். ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு இன்ப ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். மறக்க முடியாத அனுபவம்: சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் அவர் எங்கள் அணியை தும்சம் செய்தது தான்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil