அஞ்சலி கவர்ச்சிக்கு அஞ்சலி!

21 April 2010 ·

வசந்தபாலனின் 'அங்காடித்தெரு' படத்தைப் போலவே விரைவில் ரிலீஸாகப் போகும் வ.கௌதமனின் 'மகிழ்ச்சி', 'ரெட்டச்சுழி' படங்களும் தனக்கு பெரிய அளவில் பேர் வாங்கிக் கொடுக்கும் என நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. கவர்ச்சிக்கு இடமே இல்லை என சொல்லும் அஞ்சலி, ''இதுக்கு முந்தி கவர்ச்சியா நடிச்சதை மறந்திடுங்க... இனிமே தவறியும் அதைத் தொடர்ந்தா வசந்தபாலன், வ.கௌதமன் ரெண்டு பேரும் எனக்கு வாங்கித் தந்த பெயருக்கு நான் செய்யுற துரோக மாகிடும்!'' எனச் சொல்லிச் சிலிர்க்கிறார் அஞ்சலி.

'வித்தகன்' படத்தில் தலைமுடி ஒட்ட வெட்டப்பட்ட போலீஸ் கெட்டப், தாதா

போல் சடைசடையாய் நீண்ட முடி என இரு கெட்டப்பில் அசத்தி இருக்கிறார் பார்த்திபன். படத்தின் மொத்தப் பாடல்களையும் அவரே எழுதி இருக்கிறாராம். அடுத்தபடியாக வேறு சில படங்களுக்கும் பாடல்கள் எழுத பார்த்திபனுக்கு வாய்ப்புகள் வருகிறதாம். 'வித்தகனை முடிச்சுட்டுத்தான் அடுத்த வேலை' எனச் சொல்லி அந்த வாய்ப்புகளை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார் பார்த்தி!

தமிழில் பெரிதாக சோபிக்காமல் போன ஜெனிலியாவுக்கு இந்தியில் ஏக வாய்ப்புகள் குவிகிறதாம். இதற்கிடையில், விளம்பரப் படங்களையும் விட்டு வைக்காமல் வெளுத்துக் கட்டும் அம்மணியை, மறுபடியும் தமிழுக்கு வரக் கோரி பல இயக்குநர்கள் அழைக்கிறார்களாம். 'சிம்புக்கு ஜோடியா நடிக்கிற மாதிரி கதை இருந்தா சொல்லுங்க...' என நடுவில் யாரிடமோ ஜெனிலியா சொன்னாராம். அதிரடிக்காரர்களுக்குத்தான் எப்பவுமே மச்சம் போல!

கௌதம் மேனனின் 'துப்பறியும் சந்துரு' முடிந்தபின் அரசியல் சப்ஜெக்ட் ஒன்றில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம் அஜீத். கார் ரேஸில் தீவிரமாக இருக்கும் வேளையிலும் அரசியல் சம்பந்தமான கதைகளை மனைவி ஷாலினி மூலமாக கேட்டுக் கொண்டிருக்கும் தல, அந்தப் படத்தில் தானே வசனம் எழுதப் போகிறாராம். 'ஏய், நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். என்னை யாரும் மிரட்ட முடியாது. நான் தனி ஆளு இல்லே' என்றெல்லாம் வசனம் பொறி பறக்குமில்ல..!

பெரிதாக வாய்ப்புகள் ஏதும் இல்லாதபோதும் அந்த மெகா அம்மணி சென்னையில் வாங்கும் வீடுகளின் எண்ணிக்கை எகிறிக்கொண்டே போகிறதாம். 'செழிப்புக்குக் காரணத்தைத் தனியா சொல்லணுமா!' என்று கூடவே குரலும் கேட்கிறது.


தாடிக்காரர் ஆசையோடு அழைத்தும் கிளுகிளு தலைப்பு படத்தில் நடிக்க சின்னப்புள்ள நடிகை மறுத்துவிட்டாராம். 'எல்லாம் யாரோ போட்டிருக்கும் ஓர் எச்சரிக்கை வளையம்தான்' என சிரித்தபடியே சொல்கிறது அந்த நடிகையின் நடவடிக்கைகள் அறிந்த வட்டாரம்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil