வெள்ளித்திரையில் மீண்டும் அர்னால்ட்

21 April 2010 ·

அகில உலக 'ஹாலிவுட்' ஆக்ஷன் நாயகனும், கலிபோர்னியாவின் கவர்னருமான அர்னால்ட் மீண்டும் வெள்ளித்திரையில் தோன்றுகிறார் என்பதே இப்போதைய ஹாலிவுட்டின் ஹாட் மேட்டர்!

எறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கு தரிசனம் தரப் போகிறார்.

ஆனால், முழு நீள ஆக்ஷன் நாயகனாக அல்ல; ஒரு ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் கெளரவ வேடத்தில் தோன்றுகிறார்.

அந்த ஆக்ஷன் திரைப்படமும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதே. 'தி எக்பெண்டபிள்ஸ்' (The Expendables) என்ற அந்தத் திரைப்படத்தில் நடித்து இயக்கி இருக்கிறார், மற்றொரு அதிரடி நடிகரான சில்வர்ஸ்டர் ஸ்டாலன்!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் இப்படம், மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது. ஸ்டாலன், ஜாஸன் ஸ்டாதம், ஜெட் லீ, எரிக் ராபர்ட் என பல அதிரடி நாயகர்களும் ஒன்றாகக் களமிறங்கியிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

இத்துடன், நண்பர் சில்வர்ஸ்டர் ஸ்டாலன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேமரா முன்பு நிற்பதற்கு சம்மதம் தெரிவித்து நடித்திருகிறார், அர்னால்ட்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லரிலும் அர்னால்ட் தோன்றுகிறார்.

எரேஸர், 'தி டெர்மினேட்டர்' சீரிஸ், ட்ரூ லைஸ் போன்ற பல படங்களால் உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரித்த அர்னால்ட், தீவிர அரசியலில் இறங்கி கலிஃபோர்னியா கவர்னரானார். அதனால், 2004-ல் வெளிவந்த 'அரவுண்ட் தி வேர்ல்ட் இன் 80 டேஸ்'ஸுக்குப் பிறகு எந்தப் படத்திலும் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil