சும்மா இருக்காது சுறா!

22 April 2010 ·

சும்மா இருக்காது சுறா!

டலில் அட்டாக்குக்கு அத்தாரிட்டி... சுறா!

சுறாக்களின் தாக்குதல் அதிகமாக நடக்கும் இடம் அமெரிக்கா. ஆண்டுக்கு 1,100 தாக்குதல்கள். ஃப்ளோரிடா, கலிஃபோர்னியா, ஹவாய் போன்ற கடல் பகுதிகளில் சுறா மீன்களின் தாக்குதல் ரொம்பவே அதிகம்.

மொத்தமாக, 360-க்கும் மேற்பட்ட சுறா வகைகள் இருந்தாலும், தி கிரேட் ஒயிட் (The great white), புல் (bull), டைகர் (tiger), ஓசியானிக் வொயிட் டிப் (oceanic white tip) வகை சுறாக்களே அதிக மாக மனிதர்களைத் தாக்குகின் றன. இதற்குக் காரணம், அவற்றின் வேட்டையாடும் சக்தியும் அதீத எச்சரிக்கை உணர்வும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் ஓசியானிக் வகை சுறா, ஆழ்கடலில் மட்டுமே வசிக்கக்கூடியது. இரண்டாம் உலகப் போரின்போது ஏகப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை எதிரிகளாக நினைத்துத் தாக்கியது ஓசியானிக் சுறாக்கள்.

1,000 ராணுவ வீரர்களோடு சென்ற நோவா ஸ்காட்டியா (nova scotia) என்கிற நீராவிக் கப்பல் தென்னாப்பிரிக்கா அருகே ஜெர்மானியப் படையால் மூழ்கடிக் கப்பட்டது. தண்ணீரில் தத்தளித்த வீரர்களைக் கூட்டம் கூட்டமாகத் தாக்கின ஓசியானிக் வகை சுறாக்கள். கடைசியில் வெறும் 192 பேர்தான் உயிர் தப்பி னார்கள்.

மனிதனை ஏன் சுறா தாக்குகிறது? சுறா மீன்களின் பெரிய உருவத்துக்குக் கொழுப்பு உணவு அதிகமாகத் தேவைப்படும். மனிதனைச் சாப்பிடுவதால் சுறா மீன்களுக்குத் தேவையான கொழுப்பு கிடைக்காது. அதனால் சுறாக்கள் மனிதர்களைச் சாப்பிடுவது இல்லை தற்காப்புக்காக மனிதர்களைக் கடித்துக் குதறி விட்டுக் கிளம்பிவிடும். அதிகக் காயங்கள், ரத்தப்போக்கு அதிகமாவது போன்ற காரணங்களால் மனிதன் மரணம் அடைகிறான். சுறாக்கள் பெரும்பாலும் ரத்த வாடையை வைத்தே மனிதனைக் கண்டுபிடிக்கின்றன. வெறும் 5 மி.லி. ரத்த வாடையை 15 மீட்டர் தொலைவில் இருந்தே சுறா மீன்களால் உணர முடியும். 'ஆம்ப்யுல்லே ஆஃப் லோரென்சினி' என்பது சுறா மீன்களுக்கு இருக்கும் ஸ்பெஷல் உறுப்பு. மற்ற உயிரினங்களின் அசைவினால் தண்ணீரில் ஏற்படும் நுண்ணிய மின் அலைகளைக்கூட பல மீட்டர் தூரத்தில் இருந்து கண்டுபிடித்துவிடும். அவ்வளவு ஏன், தூண்டிலின் அசைவைக்கூடக் கண்டுபிடித்து படகில் மீன் பிடிப்பவர்களைச் சுறாக்கள் தாக்கிய கதைகள் உண்டு!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites