அகதி!

22 April 2010 ·

அகதி!

யுத்தங்களில் யார் வென்றார்கள், யார் தோற்றார்கள், எத்தனை வீரர்கள் இறந்தார்கள், எத்தனை வீரர்கள் சிறைபட்டார்கள்... இப்படிப் பல 'எத்தனைகள்' போர்களின் வரலாற்றில் இடம் பெற்றிருக்கும். ஆனால், எத்தனை குடிமக்கள் கொடூரத் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள் என்று சிந்தித்திருப்போமா?

யுத்தம் என்பது இரண்டு நாட்டுப் படைகளுக்கு இடையேதானே தவிர, அந்த நாடுகளின் மக்களுக்கு இடையே அல்ல. முறையற்ற யுத்த நடைமுறைகள் சாதாரண மக்களை ஏன் காயப்படுத்த வேண்டும்? இதற்கு சமீபத்திய உதாரணம், ஈழம். போர்க் கருவிகளைக்கொண்டு படைகளோடு மோதுவதைவிட்டு க்ளஸ்டர் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் போன்றவற்றைத் தூவி பல ஆயிரக்கணக்கான மக்களைத் துடிதுடிக்கவைத்துச் சாகடித்தது இலங்கை. ஐ.நா-வின் போர் விதிகளை மீறி சாதாரண மக்களைக் குறிவைத்து கெமிக்கல் மற்று

பயோ-ஆயுதங்களைப் பயன்படுத்தியதைத் தட்டிக்கேட்க இங்கே யாருமே இல்லை. யுத்தத் தாக்குதல்களில் உயிர் போவதோ, ஊனமாவதோகூடப் பெரிய அதிர்வுகளை உண்டு பண்ணாது. அது ஒரு நொடியில் ஏற்பட்டுவிடுகிற விஷயம். ஆனால், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த வேர்களை வெட்டிவிட்டு, மண் மறந்து அகதியாகிப் புலம் பெயர்வது எத்தனை சிக்கலானது?

Uppsala Conflict Data Program ன் 2007-ம் ஆண்டின் கணக்குப்படி உலகம் முழுக்கப் போர் தாக்குதல்களால் 11.4 மில்லியன் மக்கள் உலகெங்கும் அகதிகளாக அலைந்துகொண்டு இருக்கிறார்கள். 2008-ல் இந்த எண்ணிக்கை 24 மில்லியனாக உயர்ந்துஇருக்கிறது. தாக்குதலில் இருந்து தப்பித்து, உயிர் பிழைத்து ஓடி வரும் அகதிகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? பல சமயங்களில் அகதியானவர்கள் தஞ்சம் புகுந்த நாட்டில் எதிரியாகவே பார்க்கப்படுகிறார்கள். அவர்களைச் சமூகக் குற்றங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வது நடக்கிறது. சில நாடுகள் அவர்களை 'மற்றவர்கள்' என்கிற பிரிவில் பொதுமைப்படுத்திவிடுகின்றன. இன்னும் சில நாடுகள் இவர்களை அகதிகளாகக்கூடப் பார்க்கத் தயாராக இல்லை. எல்லை தாண்டி வந்தவர்களாகவே பார்க்கிறது. இப்படி போர் முடிந்த பின்னும்கூட அவர்களின் மீதான தாக்குதல்கள் குறைவதே இல்லை.

''அகதிகளாக வருகிறவர்களிடம் நம் நாட்டு எல்லைகளுக்கு உட்பட்ட சட்ட திட்டங்களோடு நடந்துகொள்ள வேண்டுமா அல்லது உண்மையான மனிதநேயத்துடன் அவர்களை அரவணைத்துச் செல்லலாமா?'' என்று கேள்வி எழுப்புகிறார் ஐ.நா-வின் அகதிகளுக்கான உயர் கமிஷனர் சடாகோ ஒகாடா. இப்படி ஒரு கேள்வி எழும்போது நம் பதில் எதுவாக இருக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் அமைகிறது மானுடம்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites