உயரமான பெண்கள் அதிகம் சம்பாதிப்பு

19 April 2010 ·



லண்டன் : குள்ளமான பெண்களைவிட உயரமானவர்கள் அதிகம் சம்பாதிப்பதாக இங்கிலாந்து ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
லண்டனைச் சேர்ந்த முன்னணி ஆடை நிறுவனமான லாங் டால் சாலி, 1,461 பெண்களிடம் விரிவான ஆய்வு நடத்தியது. அவர்களது உயரம், வருமானம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. உயரம் அடிப்படையில் பெண்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
உயரமான பெண்கள் பிரிவில் 5 அடி 8 அங்குலத்துக்கு மேல் உயரம் கொண்டவர்கள் 5ல் ஒருவர் அவர்களைவிட குள்ளமான பெண்களைவிட ஆண்டுக்கு ரூ.20.4 லட்சம் சம்பாதிப்பதாக தெரிவித்தனர். இது 20 சதவீதம். 5 அடி 8 அங்குலத்துக்கு கீழ் அதேநேரம் சராசரி உயரம் கொண்ட பெண்களில் 10 சதவீதத்தினர் இந்த அளவு சம்பாதிப்பது தெரிய வந்தது.
அதைவிட குள்ளமான பெண்கள், ஆண்டுக்கு சராசரியாக ரூ.17 லட்சம் மட்டுமே வருமானம் பெறுகின்றனர். அவர்களில் 90 சதவீதத்தினர் குறைவான உயரம் காரணமாக தங்கள் அழகில் திருப்தி இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், 5 அடி 8 அங்குலத்துக்கு மேல் உயரம் கொண்ட பெண்களில் 25 சதவீதத்தினர் தங்களது அழகில் திருப்தி தெரிவித்தனர்.
இதுபற்றி ஆய்வுக் குழுவைச் சேர்ந்த அரின்னே கோஹென் கூறுகையில், ‘‘உயரமான பெண்கள் அதிகம் சம்பாதிப்பது மட்டுமின்றி, தலைமை பதவிகளையும் வகிக்கின்றனர். தன்னைவிட உயரம் குறைந்தவர்களை கீழ் நோக்கி பார்த்துப் பேசும்போது கூடுதல் நம்பிக்கையைப் பெறுகின்றனர்’’ என்றார்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites