எனக்கு அரசியலே வேணாம்!'' : மு.க.அழகிரி

18 April 2010 ·'துரை டி.வி.எஸ் நகரில் இருக்கிறது முதல்வரின் மகன் மு.க.அழகிரியின் வீடு. வாசலில் ஏ.ஸி-க்காக உறுமிக்கொண்டிருக்கிறது 'லாண்ட்ரோவர்'. வீட்டினுள் மொத்தமாக நம்மை உள்வாங்கிக் கொள் கிறது சோபா. டீப்பாயின் மீது பியானோ வடிவத்தில் அழகிய தொலைபேசி ஒன்று நம்மை ஈர்க்கிறது. 'வந்து ரொம்ப நேரமாச்சா?!'' என்று கேட்டபடியே அமர்கிறார் என்றுமே இளமை மாறாத அழகிரி.


அடிக்கடி கோபப்படுவீர்களோ..?''

''சாந்தம்னு ஒண்ணு இருந்தா, அதுக்கு எதிரான கோபமும் இருக்கத்தானே செய்யும்! உதவி வேணும்கிறதுக்காகப் பொய் சொல்றவங் களை, அநியாயமா நடந்துக்கிற ஆளுங்களைப் பார்த்தா கோபம் வரும். சிரமப்பட்டு ஒரு வேலை வாங்கித் தருவேன். அடுத்த நாளே 'டிரான் ஸ்ஃபர் வேணும்; பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை'னு பொய் சொல்வாங்க. அப்பல் லாம் ரொம்பக் கோபம் வரும். ஒரு வேலை நான் சொல்றேன்னா அது நடக்கணும். 'இல்லே... வந்து...'னு ஏதாவது சமாளிச்சாங் கன்னா சட்டுனு கோபம் வந்து சத்தம் போடுவேன். அவ்வளவுதான்..!''

'' 'கலைஞருடன் அழகிரி தகராறு... போனில் கண்டிக்கப்பட்டார்'னு அடிக்கடி நியூஸ் வருதே..?'

'சண்டை, அது இதுனு எழுதறதெல் லாம் பத்திரிகைக்காரங்கதான். எங்க ளுக்குள்ளே அப்படி எதுவும் கிடையாது. இப்போ இந்த விடியோகேம்ஸ் கடை திறப்புவிழாவின்போதுகூட, அப்பா என்னைத் திட்டியதாகச் செய்தி போட் டாங்க. உண்மையில், முதலில் எனக்கு போனில் வாழ்த்துச் சொன்னதே அப்பாதான். அதே மாதிரி, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவையாவது ஸ்டா லின் - அழகிரி மனஸ்தாபம்கிற மாதிரி நியூஸ் வந்துடும். இதற்கெல்லாம் நான் மறுப்புக் கொடுக்க ஆரம்பிச்சா, வேற வேலையே பார்க்க முடியாது. அண்ணன் - தம்பி பாசம் எங்களுக்குள்ள எப்பவும் உண்டு.''

தி.மு.க-விலிருந்து வைகோ பிரிந்த போது தென் மாவட்டங்களில் சரிந்த தி.மு.க-வை ஒற்றை ஆளாகத் தூக்கி நிறுத்தியவர் அழகிரி. அதன்பிறகு கே.கே.எஸ்.எஸ்.ஆர்., பொன்.முத்துராமலிங்கம் போன்றவர்களைத் தி.மு.க-வுக்கு இழுத்து வந்தவரும் அழகிரிதான்.

''திடீரென அரசியலில் இருந்து வில குவதாக அறிக்கை விட்டீங்க. ஏன் இந்த ஸ்டன்ட்?'' என்றதும், வெளிப்படை யான பதில் தருகிறார்.

''நான் அரசியலில் இருந்து விலகுவதை ஸ்டன்ட்னு நினைச்சா, இந்த அழகிரியைப்பற்றி நீங்க புரிஞ்சுக் கிட்டது அவ்வளவுதான்! நிஜமா கவே நான் அரசியலுக்கு வர மாட்டேன். எனக்கு அர சியலே வேணாம். இதுக்கு வெளியே சொல்லமுடி யாத பல காரணங்கள் இருக்கு...'' என்றவர், சிறிது யோசனைக்குப் பின், ''எனக்கு இந்தக் கூட்டணி விஷயங் கள்ல அவ்வளவு உடன்பாடு கிடையாது. தேர்தலப்போ ஒரு கட்சி இன்னொரு கட்சியின் காலைப் பிடிப்பதும், பிறகு எதிர்ப்பதும்... இதுமாதிரி அரசியல் அநாகரிகங்கள் எனக்குப் பிடிக்கலை. தேர்தலின்போது தொண்டர்களை மதிக்கும் வேட் பாளர்கள், ஜெயித்த பிறகு தொண்டர்களை மதிக்காமல் இருப்பது... இதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயங்கள். இதுவும் கூட நான் அரசியலில் இருந்து விலகுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது எனது பொதுவான கருத்து. யாரையும் தனிப்பட்ட முறையில் நான் குற்றம் சொல்லலை'' என்றார்.

அழகிரியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பிரபலம். ஏதாவது கல்யாண மண்டபம் பிடித்து, கட்சி மாநாடு போலக் கலக்கி விடுவார்கள் தொண்டர்கள்.

''பர்சனலா அது எனக்குப் பிடிக்காது. ஆனா, அதைச் சாக்கிட்டு ஏழைகளுக்கு வேட்டி - சேலை, டிரைசைக்கிள், அயர்ன் வண்டி போன்றவற்றைக் கொடுக்கிறேன். வசதியானவர்களிடம் இதைச் செய்து கொடுங்கனு கேட்டு வாங்கி, ஏழை மக்களுக்கு இந்த உதவியைச் செய்து வருகிறேன்'' என்றார்.

''நீங்கள் எப்படி நினைவு கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?'' என்றதும், 'பளிச்'சென்று பதில் சொன்னார்:

''பதவியிலேயே இல்லாமல் மக்களுக்கும் கட்சித் தொண்டர் களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தான் இந்த அழகிரினு மக்கள் பேசினால் போதும்!''

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil