வருங்காலத் தொழில்நுட்பம் - 39 : ஐ-பேட், பி1 விசா மற்றும் சில!

18 April 2010 ·

வருங்காலத் தொழில்நுட்பம் - 39 : ஐ-பேட், பி1 விசா மற்றும் சில!

ன்லைனில் வீடியோ பார்க்கத் தேவையான Flash வேலை செய்வது இல்லை என்ற குறையை விரைவில் வெளிவரப்போகும் HTML 5 சமன் செய்துவிடும் என்பதால், ஐ-பேடை அச்சம் இல்லாமல் வாங்குங்கள் என்கிறார்கள் ஆப்பிள் மோகிகள்.

ஒரு வலைப்பதிவர் ஐ-பேடின் உள் இயங்கும் மென்பொருளைத் துண்டுதுண்டாகப் பிரித்து அலசி, கேமராவுக்கான பகுதியைக் கண்டுபிடித்து பதிவு ஒன்றை வெளியிட, அடுத்த ஜெனரேஷன் சாதனத்தில் கேமரா கண்டிப்பாக இருக்கும் என்று ஊகங்கள், அதையட்டிய கொண்டாட்டங்கள். பிரபலமான Wall Street Journal நாளிதழில் ஐ.டி. தொழில்நுட்பங்களை அலசி எழுதும் வால்டர் மோஸ்பேர்க், 'ஐ-பேட் லேப்-டாப்புக்குச் சவால்விடுகிறது' என்று பாசிட்டிவ் ஆக எழுதியிருக்கும் பதிவு, பெரிய நிறுவனங்களும் ஐ-பேடைப் பயன்படுத்தத் தூண்டும். (http://ptech.allthingsd.com/20100331/apple-ipad-review/).

இணையத்தின் பிரபலத்தால் நாள்தோறும் நசிந்து வரும் பத்திரிகை நிறுவனங்கள், ஐ-பேடை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. கிட்டத்தட்ட விகடன் பிரின்ட் எடிஷன் அளவில் இருக்கும் ஐ-பேட், பத்திரிகைகளை அப்படியே பேப்பர் வடிவில் படிக்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஒன்று மட்டும் தெளிவு, ஆப்பிள் நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல்; படுபாடுபட்டுத் திணறி வரும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கே ஐ-பேட் மிகப் பெரிய வரமாக இருக்கப்போகிறது!

கிடுகிடுவென வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியும் இணைய நுகர்வும் பிரபல இன்டர்நெட் நிறுவனங்களுக்கு இந்தியாவில் கடை விரிக்க அதிக ஆர்வத்தை அளிக்கின்றன. ஃபேஸ்புக் பயனீட்டாளர்களுக்கு நன்கு அறிமுகமான Farmville விவசாய விளையாட்டுத் தயாரிப்பு நிறுவனமான Zynga இந்தியாவில் அலுவலகம் ஒன்றைச் சென்ற மாதம் தொடங்கி இருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனமும் தங்களது கிளையை இந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்தியாவை மலிவான விலையில் ஆள் பிடிக்கும் அவுட்சோர்ஸிங் தளமாகப் பயன்படுத்திக்கொண்டு இருந்த நிலை தாண்டி, இந்தியாவைச் சந்தையாகப் பார்ப்பது ஆரோக்கியமான உலகமயமாதலே. திரைகடல் ஓடி திரவியம் தேடி வரும் இந்த நிறுவனங்களால், இந்தியாவின் ஐ.டி. இண்டஸ்ட்ரிக்கு வேலைவாய்ப்புகள் உட்பட பல நன்மைகள். ஏதாவது தீமை உண்டா என்பதைப் பார்க்க சற்றே பொறுத்து இருக்கலாம்.

இது அனைத்தையும்விட மிக முக்கியச் செய்தி: அமெரிக்க அரசின் பரிசீலனைக்கு வந்திருக்கும் தொழில் முனைவோர் விசா. அமெரிக்காவின் வேலை விசாவான பி1, வேலை கொடுப்பவர்களுக்கே சாதகமாக இருந்து வந்திருக்கிறது. அந்த விசாவில் இருக்கும்போது தொழில் முனைவது சாத்தியம் இல்லை என்பதால், சிறந்த ஐடியாக்களும் கடின உழைப்பும் செய்யத் தயாராக உள்ளவர்களும் பல வருடங்கள் காத்திருந்து, க்ரீன் கார்டு எனப்படும் நிரந்தரக் குடி உரிமை பெற்று, அதற்குப் பின்னரே தொழில் முனைய முடியும் என்றிருந்த நிலை இந்த விசாவினால் மாறும். இந்த விசா வாங்குவதற்குக் கீழ்க்கண்டவை தேவை:

சிறந்த பிசினஸ் ஐடியா. இது இன்டர்நெட் துறையில்தான் இருக்க வேண்டும் என்பது தேவை இல்லை. (ஆனால், இணையத்தில்தான் அதிகமான ஐடியாக்கள் உருவாக்கப்படும் என்பதைச்சொல்லத் தேவை இல்லை).

இந்த ஐடியாவை அங்கீகரித்து தொழில் முதலீட்டாளர் எவராவது 2,50,000 டாலர்களைக் கொடுக்க வேண்டும்.

இது கிடைத்தவுடன் நீங்கள் அமெரிக்காவுக்கு வந்து உங்களது நிறுவனத்தைத் தொடங்கி விடலாம்.

தொடங்கிய 2 வருடங்களுக்குள் 5 பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். அதோடு, ஒரு மில்லியன் டாலருக்கு தொழில் முதலீடோ அல்லது உங்கள் நிறுவனம் வருவாயோ (லாபம் அல்ல) உண்டாக்கியிருக்க வேண்டும்.

இதைச் செய்ய முடிந்தால், உங்களுக்கு உடனடியாக க்ரீன் கார்டு வழங்கப்படும்.

திறமைசாலிகளை நாட்டுக்குள் கொண்டுவருவது வேலைவாய்ப்புகளைக் கொடுக்கும் என்பதால், இந்த மாதம் அமெரிக்க செனட்டில் விவாதிக் கப்படும் இந்த பில் சட்டமாகிவிடும் என்றே தோன்றுகிறது.

இந்தக் கட்டுரை எழுதப்படும் ஏப்ரல் 1-ம் தேதி அன்று இணைய உலகத்தை ஒரு க்விக் ரவுண்ட் அடித்தால், முட்டாள்கள் தினத்தைப் பயன்படுத்தி, பல கோணங்கித்தனங்கள் அரங்கேறிக்கொண்டு இருப்பது தெரியவருகிறது.

கூகுள் தங்களது ஊருக்கு இலவச இன்டர்நெட் இணைப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையோடு அமெரிக்க ஒரேகான் மாநில ஊரான டொபெகா தனது பேரை கூகுள் என்று மாற்றிக்கொண்டதுபற்றி சில வாரங்களுக்கு முன் இந்தத் தொடரில் எழுதினேன். இதற்கு எட்டாம் போட்டியாகத் கூகுள் தங்களது நிறுவனத்தின் பெயரை டொபெகா என மாற்றிக்கொண்டுவிட்டதாக அறிவித்திருப்பது செம லொள்ளு.

http://googleblog.blogspot.com/2010/04/different-kind-of-company-name.html
http://img.skitch.com/20100401-p6dihc168mdw9pba4949sp5a91.jpg

பை தி வே, கூகுளுக்கு வருடா வருடம் ஏப்ரல் 1 தினத்தில் இப்படி ஏதாவது செய்வது கடந்த 10 வருடங்களாகத் தொடர்ந்து நடக்கிறது. இந்த உரலியில் சென்ற வருடங்களின் அட்டகாசங்கள்:
http://www.businessinsider.com/a-history-of-googles-april-fools-pranks-2010-3#2000-mentalplex-google-search-for-your-brainwaves-1

பிரபல டெக்னாலஜி வலைதளமான TechCrunch பதிவு ஒன்றில் எப்படி ஒரு லேப்-டாப்பை ஐ-பேட் போல எளிதாக மாற்ற முடியும் என்ற பதிவை வெளியிட்டு இருக்கிறது. சீரியஸாகத் தோன்றும் இந்தப் பதிவின் வீடியோவைப் பாதிக்கும் மேல் பார்த்த பின்னரே, மைக்கேல் ஆரிங்க்டன் ஒரு வாளைக்கொண்டு லேப்டாப்பைக் கரகரவென அறுக்கும்போதுதான், நம் தலையில் சுற்றப்படும் பூவின் வாசம் தெரிகிறது

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil