கா‌‌‌‌ரீனாவுக்கு நிச்சயதார்த்தம்?

19 April 2010 ·
கா‌‌ரீனா கபூருக்கும
், சைஃப் அலிகானுக்குமான காதல் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளதாக மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெ‌‌ரிவிக்கின்றன.

கா‌ரீனா ஷாகித் கபூர் காதல் உச்சத்தில் இருந்தபோது இருவருக்கும் நடுவில் புகுந்தார் சைஃப் அலிகான். கா‌‌‌‌‌‌ரீனா ஷா கித்துக்கு கல்தா கொடுத்து சைஃப்பை காதலிக்கத் தொடங்கியதை அனைவரும் ஆச்சா‌‌‌ரியமாகவே பார்த்தனர்.

காரணம் ஷாகித் திருமணமாகாதவர், காரீனாவின் வயதையொத்தவர். மாறாக சைஃப் அலிகான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தவிர இரண்டு குழந்தைகள் வேறு இருக்கிறது.

பல வத‌ந்திகளுக்குப் பிறகும் இவர்களின் காத‌ல் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. சென்ற வாரத்தில் சைஃபின் வீட்டில் வைத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்துள்ளது என மும்பை பத்தி‌‌‌ரிகைகள் எழுதியுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இருவரும் கருத்து தெரிவிக்கவில்லை.

நிச்சயதார்த்தத்தை விடுங்கள், இருவரும் விரைவில் முறைப்படி திருமணம் செய்துக் கொள்ளப் போவது உண்மைதான் என்கிறா ர்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்.

இந்த காதல் ஜோடியில் கா‌‌‌‌‌ரீனாவுக்கு வயது 29. சைஃப் அலிகானுக்கு... அதிகமில்லை 43 தான்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil