நாளை ஐ.பி.எல். கூட்டம் லலித்மோடி பதவி பறிப்பு

25 April 2010 ·


நாளை ஐ.பி.எல். கூட்டம் லலித்மோடி பதவி பறிப்புஐ.பி.எல். தலைவரான லலித்மோடி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவரை பதவியில் இருந்து தூக்கி எறிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) முடிவு செய்துள்ளது.

ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டத்துக்கு முன்பு பதவியில் இருந்து விலகுமாறு அவரை கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். தன் மீதான புகாருக்கு விளக்கம் அளிக்க மேலும் 5 நாட்கள் அவகாசம் தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இதை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை. முதலில் பதவி விலகட்டும் என்று கூறப்பட்டது.

இது தொடர்பாக சரத்பவார் நடத்திய சமரச திட்டம் தோல்வி அடைந்தது. ஐ.பி.எல். தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யமாட்டேன் முடிந்தால் என்னை நீக்கி பாருங்கள் என்று “டுவிட்டர்” இணையதளத்தில் லலித்மோடி சவால் விட்டு இருந்தார்.

அதோடு ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்த பின்பு பல்வேறு அதிரடியான தகவல்களை வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஐ.பி.எல். ஆட்சி மன்றகுழு கூட்டம் மும்பையில் நாளை
(26-ந் தேதி) நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று மோடி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்த கூட்டத்தில் ஐ.பி.எல். தலைவர் பதவி யில் இருந்து லலித்மோடி நீக்கப்படுகிறார்.

லலித்மோடிக்கு ஆதரவாக முன்னாள் வாரிய தலைவர் பிந்தரா உள்ளார். மற்றொரு ஆதரவாளரான மத்திய மந்திரி பரூக் அப்துல்லா நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என்று கூறப்படுகிறது.

லலித்மோடிக்கு பதிலாக ஐ.பி.எல். அமைப்பை நிர்வகிக்க ரவிசாஸ்திரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். நாளைய கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும்.

இந்த நிலையில் கிரிக்கெட் வாரிய தலைவர் சசாங் மனோகர், செயலாளர் என். சீனிவாசன், தலைமை நிர்வாக அலுவலர் ரத்னாகர் ஷெட்டி, ஐ.பி.எல். துணைத் தலைவர் நிரஞ்சன்ஷா ஆகியோர் மும்பையில் உள்ள கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்கள். நாளை ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil