லலித் மோடிக்கு விரைவில் கல்தா ! பல கோடி கறுப்பு பணம்; கிரிக்கெட் சூதாட்டத்திலும் தொடர்பு

19 April 2010 ·புதுடெல்லி : கொச்சி ஐபிஎல் அணி சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் சசிதரூர் பதவி பறிக்கப்பட்டதை போல, இந்த சர்ச்சையை தொடங்கி வைத்த ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியின் பதவியை பறிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்டம் உள்பட முறைகேடான பல வழிகளில் லலித் மோடி பணம் சேர்த்தது பற்றியும் வருமானவரித்துறை ரகசிய அறிக்கை தயார்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
செய்துள்ளது. இதை வைத்து லலித் மோடியின் பதவியை பறிக்க தீவிர ஆலோசனை நடக்கிறது.
கொச்சி அணி சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் சசிதரூர் நேற்று இரவு 10 மணிக்கு தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்தார். இதை ஏற்றுக் கொண்ட பிரதமர் உடனடியாக ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு அனுப்பினார். புனேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் பிரதிபா, சசிதரூரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி அலுவலகம் நேற்றிரவே அறிவித்தது.
இதற்கிடையில் இந்த சர்ச்சையை தொடங்கி வைத்த ஐபிஎல் தலைவர் லலித் மோடிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. 2 நாளுக்கு முன்பு தர்மசாலாவில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் லலித்மோடிக்கு அழைப்பு விடப்படவில்லை. லலித் மோடியின் அதிகாரத்தை குறைப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் லலித் மோடியின் பதவி பறிக்கப்படலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வாரிய வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் மனோகர் மற்றும் செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமையில் வரும் 2&ம் தேதி பிசிசிஐ கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இந்த தீர்மானம் பதவி பறிப்பு தீர்மானமாக இருக்கலாம் அல்லது அதிகார குறைப்பு தீர்மானமாக இருக்கலாம். இரண்டில் ஒன்று நிச்சயம்’ என்று தெரிவித்தன.
இதற்கிடையில் லலித் மோடி மீதான வருமான வரி விசாரணையை துரிதப்படுத்துவது குறித்து வருமானத்துறை அதிகாரிகளுக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வருவாய்த்துறை செயலாளர் ஆகியோர் ஆலோசனை வழங்கவிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆயிரக்கணக்கான கோடிகள் புரளும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தும் லலித் மோடியின் அந்தஸ்து கடந்த 4 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. தனி விமானம், டஜன் கணக்கில் பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார்களில் வலம் வருகிறார். இவரது நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த 6 மாதமாக தீவிரமாக கண்காணித்து வந்தது. முதல் 2 ஐபிஎல் போட்டிகளில், லலித் மோடி தனது கூட்டாளிகள் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. லலித்மோடி சார்பாக டெல்லியை சேர்ந்த சமீர் துக்ரல் என்பவர் கிரிக்கெட் சூதாட்டம் நடத்தியுள்ளார் என கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளில் லலித் மோடி ரகசிய உரிமையாளராகவும் உள்ளார் என கூறப்பட்டுள்ளது. லலித் மோடியின் மைத்துனர் சுரேஷ் செல்லாராமுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 25 சதவீத பங்குகள் உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கோடிக்கணக்கான மதிப்பில் கருப்பு பணத்தை லலித் மோடி குவித்து வைத்துள்ளதாக வருமானவரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, லலித் மோடியின் பதவியை பறிப்பது குறித்து மத்திய அரசு தரப்பிலும் கிரிக்கெட் வாரியத்திலும் தீவிர ஆலோசனைகள் நடந்து
வருகின்றன.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil