நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டார் நமீதா இயக்குனர் புகார்

19 April 2010 ·


நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டார் நமீதா இயக்குனர் புகார்

‘அழகான பொண்ணுதான்’ படத்தில் நடிப்பதற்கு நமீதா ஒத்துழைப்பு கொடுக்கவில்லை; அவரால் நஷ்டம் ஏற்பட்டது என்றார் அப்படத்தின் இயக்குனர் திரு. இதுபற்றி அவர் கூறியதாவது: 18 வயது இளைஞன், தன்னைவிட வயதில் மூத்த பெண் மீது ஆசைப்படுகிறான். அதனால் அவன் வாழ்க்கையில் எப்படி பாதிப்படைகிறான் என்பதை மையமாக வைத்துத்தான் இந்தக் கதையை அமைத்தேன். நமீதாவிடம் சொன்னேன். நடிக்க ஒப்புக்கொண்டார். முதலில் போட்டோ ஷூட் எடுக்க ஒத்துழைப்பு கொடுத்தார்.

அப்போது பட ஹீரோ கார்த்திஷுடன் இணைந்து போஸ் கொடுத்தார். பிறகு கால்ஷ¦ட் கொடுக்காமல் இழுத்தடிதார். பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும் கால்ஷீட் தரவில்லை. கார்த்திஷ் நேரில் சென்று கெஞ்சிய பிறகு நடிக்க சம்மதித்தார். அப்போது கூட ‘நான் எந்த படத்திலும் கவர்ச்சியாக நடித்ததில்லை. உங்கள் படத்திலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்’ என்றார். ஒப்புக்கொண்டேன்.

ஆனாலும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது புகார் கொடுத்தார். இவ்வளவு பிரச்னைகளையும் எதிர்கொண்டு ஒரு வழியாக படத்தை எடுத்தேன். வசனங்கள் பேசுவதிலும் ஆர்வம் காட்டவில்லை. அதனால் பல காட்சிகளில் அவரை நடக்க விட்டுத்தான் படமாக்கினேன். ஒரு பாடல் காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். கிளைமாக்ஸ் காட்சியிலும் முழுமையாக நடிக்கவில்லை. இதனால் 25 நிமிட காட்சிகளை என்னால் இயக்க முடியவில்லை. முழுமையான கிளைமாக்ஸ் இல்லாமல் படத்தை வெளியிட நேர்ந்தது. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திரு கூறினார்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites