தனித் தீவில் ரம்பா!

24 April 2010 ·

தனித் தீவில் ரம்பா!

தமிழ் சினிமாவில் பீரியட் பிலிம் எடுப்பதே ஒரு லேட்டஸ்ட் ஃபேஷனாகி விட்டது. 1960-களில் தஞ்சையில் விவசாயிகளின் பிரச்னைகளை மையமாக வைத்து 'நெல்லு' படத்தை எடுத்து வருகிறார்கள். முழுக்க முழுக்கப் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை 'கோலங்கள்' சீரியலில் பணியாற்றிய சிவசங்கர் இயக்குகிறார். பிராமண - தலித் மக்களுக்கு இடையே நிலவிய பேதங்களை மையமாக வைத்துப் புனையப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், பிராமண சமூகத்தவர்களை தலித் கதாபாத்திரங்களாகவும், தலித் இனத்தவர்களை பிராமண கேரக்டர்களாகவும் நடிக்க வைத்திருக்கிறார்கள்!

மாப்பிள்ளை இந்திரன், தன் புது மனைவி ரம்பாவோடு ஹனிமூனுக்குக் கிளம்பி

விட்டார். நியூஸிலாந்தில் உள்ள ஒரு தனித் தீவுதான்ஹனி மூன் ஸ்பாட்டாம். ரம்பாவின் சாய்ஸாம் இந்தத் தீவு. ஸ்பெஷல் ரிசார்ட்ஒன்றை சர்ப்ரைஸாக புக் பண்ணி அசத்தியிருக்கிறாராம் இந்திரன்.

சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு கல்லூரியில் நடந்து, வெளியில் வராமல் அமுங்கிப் போன அசம்பாவிதம் ஒன்றை மையமாக வைத்து 'உனக்காக என் காதல்' என்கிற படம் உருவாக்கப்பட்டு வருகிறது. எந்தக் கல்லூரியில் நடந்த அசம்பாவிதம் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். படம் வெளியான பிறகு அதில் சம்பந்தபட்டவர்கள், 'இந்தக் கதை எங்கள் கல்லூரியில்தான் நடந்தது' என்று தொடர்பு கொண்டு மேலும் சில விவரங்களைச் சொன்னால், லட்ச ரூபாய் பரிசாகக் கொடுக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜெயக்குமார். கல்லூரி மாணவர்களை தியேட்டருக்கு வரவழைக்க இப்படியரு டிரிக்ஸா?!

எந்தக் கருத்தையும் யாருக்கும் தயங்காமல் தன் னைப் போலவே போல்டாக பேசுவதால் குஷ்புவை ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடிக்கும். அதனாலேயே ஜெயா டி.வி-யில் குஷ்பு வுக்கென்றே ஸ்பெஷல் புரோக்கிராம் ஏற்பாடு செய் திருந்த ஜெ., பின்னா ளில் அம்மணியை கட்சிப் பணியாற்ற அழைக்கவும் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், சமீபகாலமாக கலைஞர் டி.வி-யே கதியெனக் கிடந்து, ஆளுங்கட்சியின் அன்பைப் பெற்று கோலோச்சும் குஷ்புவின் நடவடிக்கைகள் தற்போது ஜெ.க்கு எரிச்சலை உண்டாக்கிவிட்டதாம். இதற்கிடையில் குஷ்புவுக்கு மேலவையில் வாய்ப்பு வழங்கப்படப் போவதாகச் செய்திகள் கசிய... கார்டனின் கோப டிகிரி கூடுதலாகிவிட்டதாம்!

பத்திரிகையாளர்களைப் பற்றி கடுமையாக விமர்சித்த விவேக், திடீரென்று ஸாரி கேட்டு கண்ணீர் விட்டதற்கு காரணம் கற்பிக்கிறார்கள் சிலர். ''விவேக் ஹீரோவாக நடித்து முடித்து பெட்டியில் தூங்கும் 'சொல்லி அடிப்பேன்' திரைப்படத்தை வாங்க ஆளில்லை. அடுத்து குஷ்பு தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கவிருந்த படமும் ட்ராப்பாகிவிட்டது. லேட்டஸ்ட்டாக டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மகனே என் மருமகனே' படமும் பிசினஸ் ஆகவில்லை. இந்த நிலையில் டைரக்டர் ஹரி அடுத்து இயக்கும் படத்தில் விவேக்கை ஒப்பந்தம் செய்யத் தயாரிப்பாளர் விரும்பினாராம். 'விவேக்குக்கும் மீடியாவுக்கும் பெரிய தகராறு இருக்கிறதால, அவரை புக் பண்ணினா நம்ம படத்தோட புரமோஷன் பாதிக்கும். அவரைவிட்டு வேறு ஆளைப் பாருங்க...' என்று சொல்லியிருக்கிறார் ஹரி. இதெல்லாம் தெரிந்துதான் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி தாஜா பண்ணப் பார்த்தார் விவேக்!'' என்கிறார்கள் விவரப் புள்ளிகள்.

சமீபகாலமாக தனித்துச் செயல்படும் ஸ்வீட்டான அந்த நடிகை மனம்கவர்ந்த இளம் நடிகர்களுக்கு போன் போட்டு அன்பைப் பொழிகிறாராம். 'பழைய துணையை எரிச்சல் படுத்த இப்படியா வந்து வலிய விழணும்?' என்று சின்ன வயசு நடிகர் ஒருத்தர் அனுதாபப்பட்டு வியந்தாராம்!

லேட்டஸ்ட்டாக அரசியல் மற்றும் சாதிச் சாயம் பூசிக்கொண்ட ஒருத்தர், தன் பழைய 'ரசிகர்களை'க் குஷிப்படுத்த புதிய 'முகங்களை' நியமித்து... இழந்த தொய்வை ஈடுகட்டுகிறாராம் சுறுசுறுப்பாக


நன்றி விகடன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil