இனி தமிழில் அசத்துவேன்... ஐஸ்வர்யா ராய்க்கு 'ராவணன்' தந்த நம்பிக்கை! இயக்குனர் மணிரத்னத்தின் 'ராவணன்' மூலம் கிடைத்த அனுபவத்தால் இனி தமிழிலும் அசத்த முடியும் என்ற நம்பிக்கை வலுவாகியிருக்கிறது என்கிறார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். இந்தியில் 'ராவண்', தமிழில் 'ராவணன்' என்ற பெயர்களில் வெளிவரும் படத்துக்காக ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் நடித்த அனுபவம் குறித்து பேட்டியளித்த ஐஸ்வர்யா ராய், "எனக்கு மிகுந்த நடுக்கமாகவே இருந்தது. இறுதித் தேர்வு எழுதி விட்டு ரிசல்டுக்கு காத்திருப்பது போன்ற அனுபவம் அது.மணிரத்னம் சிலசமயம் கடைசி நிமிடத்தில் காட்சிகளை மாற்றிவிடுவார். டயலாக்கை தமிழ், இந்தி என இரண்டிலும் மனப்பாடம் செய்வதற்கு சிரமப்பட்டுவிடுவேன். விக்ரம் உள்ளிட்ட சக நடிகர்கள் மூலமும் தமிழை நன்றாக கற்றுக் கொள்ள முடிந்தது. முடிவில், அடுத்தடுத்து தைரியமாக நிறைய நல்ல தமிழ்ப் படங்களில் நடிப்பதற்குரிய நம்பிக்கையை 'ராவணனும்', மணி ரத்னமும் தந்திருக்கின்றனர்," என்கிறார் குதூகலத்துடன். ராவணனில் தனது கதாப்பாத்திரம் பற்றி குறிப்பிடுகையில், "என் கதாப்பாத்திரத்தின் பெயர் ராகினி. அவள் தைரியமானவள், உணர்வுப்பூர்வமானவள், மொத்தத்தில் முழுமையான பெண். அந்தக் கதாப்பாத்திரத்துடன் என்னால் பொருந்திப் போக முடிந்தது," என்று விவரிக்கிறார். இந்தி 'ராவண்' அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாகவும், தமிழ் 'ராவணன்' விக்ரமுக்கு ஜோடியாகவும் வலம் வரும் ஐஸ்வர்யா ராய் தற்போது ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 'எந்திரனி'ல் பிஸியாக இருக்கிறார். அதைத் தொடர்ந்து, தமிழில் தொடர்ந்து நடிப்பது என முடிவெடுத்திருக்கிறாராம் ஐஸ்!
இனி தமிழில் அசத்துவேன்... ஐஸ்வர்யா ராய்க்கு 'ராவணன்' தந்த நம்பிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment