ஐபிஎல் போன்று அமைப்பை ஆரம்பிப்பாரா மோடி?
கே.கே மோடியின் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை லலித் மோடி விரைவில் ஏற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் லலித் மோடி விரும்பினால், ஐபிஎல்லைப் போன்ற புதிய அமைப்பைத் தொடங்க அவருக்கு ரூ.400 கோடி பணம் தரத் தயார் என்று லலித் மோடியின் தந்தை கே.கே. மோடி கூறியுள்ளார்.
மால்பரோ, போர் ஸ்கொயர், ரெட்அன்ட் ஒயிட் ஆகிய சிகரெட் வகைகளை தயாரித்து விற்கும் கேட்பிரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் கே.கே. மோடி. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.3500 கோடியாகும்.
மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டவர் லலித் மோடி. இதனாலேயே மோடி நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால் லலித் மோடி மனம் தளரக் கூடாது. எதிர்த்துப் போராட வேண்டும். வெற்றி பெற வேண்டும் எனவும் கே.கே மோடி தெரிவித்துள்ளார்.
மோடியயை நம்பித்தான் அணி உரிமையாளர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். மோடி மீதான நம்பிக்கைதான் ஐபிஎல் அமைப்பு இவ்வளவு தூரம்வளரக் காரணம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போன்று அமைப்பை ஆரம்பிப்பாரா மோடி?
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment