தமன்னா வெற்றிக்கு உதவியது எது தெரியுமா?

25 April 2010 ·

தமன்னா வெற்றிக்கு உதவியது எது தெரியுமா?

Actress Thamana change her name as Thamannaa
கேடி படத்தில் அறிமுகமானபோது புதுமுகங்களில் பத்தோடு ஒன்றாக பல்லிழித்துக் கொண்டிருந்த தமன்னாவின் மார்க்கெட் இப்போது உச்சத்தை தொட்டுத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தில் படிக்க ரூ.1 கோடி சம்பளம் வேண்டும், முன்னணி ஹீரோக்களுடன்தான் நடிப்பேன், விருப்பம் இருந்தால்தான் கவர்ச்சி காட்டுவேன் என்று கண்டிஷன்களை அடுக்கிக் கொண்டே போனாலும், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஹீரோக்களுக்கு தமன்னா ஜூரம் நீடிப்பதால் தமன்னா காட்டில் பண மழைதான். அதுவும் பையா படத்தில் மழையில் நனைத்து ஆட்டம் போட்ட தமன்னாவுக்கு ரசிகர்கள் மத்தியிலும் ஏகப்பட்ட வரவேற்பு. குறிப்பிட்ட சில காலத்திலேயே தமன்னா இந்த அளவுக்கு வெற்றி பெற்றதற்கு காரணம் என்ன என்று விசாரித்தால், புது விளக்கம் ஒன்றை சொல்கிறார்கள் தமன்னாவுக்கு நெருக்கமானவர்கள். ஆரம்ப காலத்தில், Thamana என்றுதான் கையெழுத்து போடுவாராம் தமன்னா. ஆனால் இப்போது சமீப காலமாக அதை மாற்றி Thamannaa என்று எழுத ஆரம்பித்திருக்கிறாராம். ஒரு நேமாலஜி நிபுணர் கொடுத்த அட்வைஸ்தான் இப்படி எக்குத்தப்பா ஒர்க்-அவுட் ஆகிவிட்டதாம்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil