வானில் வெடித்து... கடலில் சிதறி..

22 April 2010 ·

வானில் வெடித்து... கடலில் சிதறி..

ங்க போனாலும் நாம அந்த ஊரை ஆளணும். அந்த ஊருக்கு நாம யாருன்னு காட்டணும்' - தீவிரவாதிகளின் தாரக மந்திரம் இப்படித்தான் இருக்கும் போலும்.


ஜூன் 25, 1985. கனடா வரலாற்றின் மிகப் பெரிய துயரம் நடந்த நாள். 31,000 அடி உயரத்தில் பறந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 392 (84 குழந்தைகள் உள்பட) உயிர்களும் ஆகாயத்திலேயே வெடித்துச் சிதறி அட்லாண்டிக் பெருங்கடலில் கண்ணிமைக்கும் நேரத்தில் கரைந்து போயினர். காரணம், அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பிய இந்திரா காந்தியின் முடிவு. இதற்குப் பழி வாங்கும் நோக்கத்தோடும், தனி காலிஸ்தான் நாடு கோரியும் போராடிய சீக்கியத் தீவிரவாத அமைப்பான 'பாபர் கால்சா' நடத்திய திட்டமிட்ட சதிதான் அந்த விமானத் தாக்குதல். இரண்டு பெட்டிகளில் வெடிமருந்து நிரப்பி, மன்சித் சிங், லக்ப்பீர் சிங் என்ற இருவரும் ஆளுக்கொரு விமானம் பிடித்து ஜப்பானுக்கும்

இந்தியாவுக்கும் புறப்பட்டனர்.


இவர்களுடைய நோக்கம் விமானத்தை மட்டும் வெடிக்கச் செய்து தங்கள் பலத்தைக் காட்டுவதுதான். இருவரும் விமானத்தை விட்டு இறங்கியதும் வெடிக்கும்படிதான் டைனமைட்டுகளை பேட்டரியுடன் இணைத்திருந்தார்கள். ஆனால், ஏர் இந்தியா 182 (கனிஷ்கா எம்பரர்) விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது. அதனால்தான் டெல்லியை நோக்கி வந்துகொண்டு இருக்கும்போது பாதி வழியில் வானில் வெடித்தது. மற்றொரு விமானம் ஜப்பானில் தரைஇறங்கிய பின்பே வெடித்தது. அதில் ஆறு பேர் இறந்தனர். இதன் வழக்கு விசாரணைகூட 20 ஆண்டுகளாக தாமதமான முறையில்தான் நடந்தது. கனடாவில் இந்த விபத்தில் இறந்தவர்களுக்காக டொரன்டோ ஸ்டான்லி பார்க்கில் நினைவுச் சின்னங்கள் வைத்திருக்கிறார்கள். இந்தியாவில்? அதற்கும் காத்திருக்க வேண்டுமோ?!


0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites