அந்த மூன்றெழுத்துக்கு இத்தனை மகிமையா?

22 April 2010 ·
வெண்ணிற ஆடை நிர்ம லாவுக்கு அந்தக் காலத்தில் படங் களில் நடிக்கும்போது இத்தனை 'புகழ்' இருந்ததோ என்னவோ தெரியவில்லை... இப்போது அவ ருக்கு எக்கச்சக்க 'புகழ்'! தினமும் அவர் பெயர் பத்திரிகைகளில் அடிபடுகிறது!

பாவம்..! முன்பு எப்போதோ மஞ்சள் கடுதாசி (ஐ.பி.) கொடுத்தா ராம். இன்சால்வென்ட்டான அவருக்கு, தெரிந்தோ தெரியாமலோ எம்.எல்.சி. பதவி கொடுக்கப்பட்டுவிட்டது.

'இன்சால்வென்ட்டான அவருக்கு எப்படி எம்.எல்.சி. பதவி கொடுக்கலாம்?' என்று ஒருவர் வழக்குத் தொடர, நிர்மலாவும் பல லட்சங்கள் திரட்டித் தன் கடனை அடைத்து, தான் இன்சால்வென்ட் அல்ல என்று கோர்ட்டில் உத்தரவு வாங்கிவிட்டார்.

'ஒரே நாளில் வெண்ணிற ஆடை நிர்மலா பத்து லட்ச ரூபாய் திரட்டிக் கட்டியது எப்படி?' என எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்கிறார்கள்.

இந்தக் காலத்தில் சில அடகுக் கடைகளுக்குத்தான் விவஸ்தையே இல்லை. டம்ளர், ஸ்பூன் என்று எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொண்டு கடனாகப் பணம் தருகிறார்கள்.

வெ.ஆ.நி. எதை வைத்து இவ்வ ளவு பணம் வாங்கினாரோ, தெரி யவில்லை. நிச்சயம் தன் எம்.எல்.சி. பதவியை அடகு வைத்துப் பணம் வாங்கியிருக்கமாட்டார் என்று கூறலாம்.

'சோ' ஒரு டி.வி. நாடகத்தில், ''அரசியல்வாதியானால் ஒரே நாளில் ரெண்டு லட்சம் சம்பாதித்து விடுவேன்'' என்று சொன்னார். அதையும் மிஞ்சிவிட்டார் வெண்ணிற ஆடை நிர்மலா! ஒரே நாளில் - அதுவும் முழு அரசியல்வாதியாக ஆகாமலேயே - பத்து லட்சம் கடனாகவோ, சம்பாதிக்கவோ முடியும் என்று நிரூபித்துவிட்டார். நிச்சயம் கின்னஸ் புத்தகத்தில், அடுத்த ஆண்டு இவர் பெயர் இடம் பெறும் என்று நம்புகிறோம்.

இன்சால்வென்ட்டுகளுக்குக் கடன் கொடுத்தவர்களுக்கு ஒரு ஐடியா! பிடிக்கவேண்டியவர்களைப் பிடித்து, அந்த இன்சால்வென்ட்டுக்கு ஒரு எம்.எல்.சி. பதவி கொடுக்கச் சொல்லுங்கள். உடனே, 'இன்சால்வென்ட்டுக்கு எப்படி எம்.எல்.சி. பதவி கொடுக்கலாம்?' என்று எதிர்க்கட்சியினர் வழக்குப் போடலாம்; மறுநாளே உங்கள் பணம் வசூலாகிவிடும்!

எம்.எல்.சி. என்ற மூன்று எழுத் துக்கு இத்தனை மகிமையா? 'மூன்றெழுத்தில் உங்கள் பணம் இருக்கும்; அது கிடைத்த பின்

னால் அது திரும்ப வரும்' என்று பாடத் தோன்றுகிறது!

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் கூட இப்படிச் சொல்லியிருக் கிறார்...

''கஷ்டப்பட்டுப் பணம் சம்பாதித்துச் சேர்ப்பதைவிட, கடன் வாங்குவது மேல். அது சிரமத்தைக் குறைக்கும்!''

பிரெஞ்சு எழுத்தாளர் ஒருவர் இப்படிச் சொல்கிறார்...

''அரசாங்கம் என்று மட்டும் ஒன்று இல்லாமல் இருந்திருந்தால், நமக்குச் சிரிப்பதற்கு பிரான்ஸில் எதுவுமே இருக்காது!''

அமெரிக்கர்களும் இந்தக் கிண்டலுக்குச் சளைத்தவர்கள் அல்ல. பிரபல நகைச்சுவையாளரும் அமெரிக்க நடிகருமான Will Rogers சொல்கிறார்...

''நான் ஜோக் எதுவும் உருவாக்குவதில்லை. அரசு செய்கிற காரியங்களைக் கவனிக்கிறேன். அதை அப்படியே உங்களுக்குச் சொல்கி றேன்!''

ஆமாம், வெண்ணிற ஆடை நிர்மலாவைப் பற்றிப் பேசும்போது இதெல்லாம் ஏன் நினைவுக்கு வருகின்றன, தெரியவில்லை!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil