படித்தால் சுடுவோம்!

22 April 2010 ·

படித்தால் சுடுவோம்!

'ஒழுங்கா ஸ்கூலுக்குப் போகலேன்னா, பூச்சாண்டிகிட்ட புடிச்சுக் குடுத்திருவேன்' என்பது நம் ஊர் நிலைமை. ஆனால், ஆப்கானிஸ்தானில்? பெண் குழந்தைகள் பள்ளிக்கூடம் போனால் உயிருடன் இருக்கவே முடியாது. கட்டுப்பாடுகளும் பெண்ணடிமைத் தனமும் நிரம்பிய ஆப்கனில் பெண்கள் படிக்கும் பள்ளிகளைக் குறிவைத்துத் தாக்குகின்றனர் தாலிபான்கள். மாணவிகள் மட்டுமல்ல, ஆசிரியைகளும் தாக்கப்படுகின்றனர். அந்நாட்டு கல்வித் துறையின் அறிவிப்பின்படி 2008-ல் மட்டும் 670 ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி¢ 2006 முதல் டிசம்பர் 2008 வரை மட்டும் 1,200 பள்ளிக் குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். விளைவு, சென்றஆண்டில் மட்டும் 700 பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. 80 சதவிகிதப் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டனர். பெண்கள் படிக்கக் கூடாது என்பதற்குத் தாலிபான்கள் சொல்லும் காரணம், 'படித்தால் தாலிபான் கொள்கைகளுக்கு எதிராக மாறிவிடுவார்கள்' என்பது. ஆப்கனில் உள்ள பள்ளிகளில் 20 சதவிகிதம் மட்டுமே பெண்கள் படிக்கும் பள்ளிகள். ஆனால், அங்கு நடக்கும் தாக்குதல்களில் 40 சதவிகிதம் இந்தப் பள்ளிகளில்தான் நடக்கிறது. இப்போது அந்த நாட்டின் படிப்பறிவு 28 சதவிகிதம் மட்டுமே. அதிலும் ஆண்கள்தான் அதிகம்


'நான் வருங்காலத்தில் டாக்டர் ஆவேன், இன்ஜினீயர் ஆவேன்' என்று எல்லாம் அந்த நாட்டுப் பெண் குழந்தைகள் சொல்வது இல்லை. அவர்கள் வருங்காலத்தில் உயிருடன் இருப்பதே பெரிய விஷயம்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil