''என் கணவர் சதம் அடிக்கணும்!''

22 April 2010 ·

''என் கணவர் சதம் அடிக்கணும்!''

Click to Enlargeல முறை தள்ளிப்போன சானியா - சோயிப் மாலிக் திருமணம் ஒருவழி யாக விம்பிள்டன் ஃபைனல்போல பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ஏதோ இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் ஆட்டத்தை கவர் செய்யும் அதே ஆர்வத்தோடு, அன்று காலையில் இருந்தே தாஜ் கிருஷ்ணா ஹோட் டலுக்கு வெளியே டி.வி. சேனல்களின் 22 ஓ.பி. வேன்கள் தேவுடு காக்க ஆரம்பித்தன.

''என் பெண்ணுக்கு முறையாக விவாகரத்து கொடுக்காவிட்டால் அவளுக்கு எப்படி மறு கல்யா ணம் நடக்கும்'' என்று புலம்பிய சோயிப் மாலிக்கின் முதல் மனைவி ஆயிஷாவின் அப்பா புகார் கொடுத்தது முதல், மாலிக்கின் பாஸ்போர்ட்டை போலீஸ் கைப்பற்றியது வரை சானியாவையும் - மாலிக்கையும் கடைசி நிமிடம் வரைக்கும் பரபரப்புகள் சுற்றிச் சுழன்றன. 'எல்லை தாண்டிய தீவிர வாதம்தான் கூடாது. எல்லை தாண்டிய காதல்கூடவா?' என இருவரும் நிருபர்களைப் பார்த்து அப்பாவியாகக் கேட்க, ''நீங்க லவ் பண்ணும்போது மும்பை தாக்குதல், தாலிபான்பற்றி எல்லாம் பேசி இருக்கீங்களா?'' என்று அன்றைய நியூசுக்கு 'பைட்ஸ்' தேற்ற கேள்வியை வீசினார் ஒரு சேனல் நிருபர். பதறிப்போன சானியா அதோடு நிருபர்களுக்குத் தடைபோட்டுவிட்டார்.

வி.ஐ.பி-க்கள் யாரும் விழாவுக்கு வரவில்லை. ஒரே விதிவிலக்கு சந்திரபாபு நாயுடு மட்டும்தான். சினிமா நட்சத்திரங்கள் பரவாயில்லை. வெங்கடேஷ் மற்றும் நாகர்ஜுனா தம்பதியினர் அவசரமாக வந்து போனார்கள். பாகிஸ்தானில் இருந்து வந்திருந்த அந்நாட்டின் பெண் அமைச்சர் ஃபிர்தோஸ் ஆஷிக், மணமக்களுக்கு வாங்கி வந்த பரிசுப் பொருட்களை ஒரு வண்டியில்வைத்து கேமராமேன்களிடம் காட்டி பப்ளிசிட்டி தேடிக்கொண்டார். சானியாவின் டென்ஷன் எல்லாம் புதிதாக இன்னொரு பிரச்னை வந்துவிடக் கூடாதே என்பதிலேயே இருந்தது. இதனாலேயே கடைசி வரை மீடியாவை விலக்கிவைத்தார். இறுதியில் தனியார் சேனல் ஒன்றுக்குப் பேசிய சானியா, ''நான் இந்தியாவுக்காக விளையாடுவேன். மாலிக் பாகிஸ்தானுக்காக விளையாடுவார். இதில் எந்த மாற்றமும் இல்லை'' என்றார். ''அப்படி என்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட் போட்டி நடக்கும்போது யார் ஜெயிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்?'' என்று பேட்டியாளர் விடாமல் கேட்க, ''நிச்சயம் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்றே விரும்புவேன். ஆனால், என் கணவர் சதம் அடிக்க வேண்டும் என்று ஆசைப் படுவேன்!''

நல்லா கொடுக்கறாங்கய்யா பேட்டி

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil