கிரிக்கெட் பார்ப்பதற்காக, இந்தியா வந்த நாமல் ராஜபக்ஷே: பரபரப்பு

19 April 2010 ·

சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்காக, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷே நேற்று இந்தியா வந்துள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 80 வயதான அவர், மருத்துவ சிகிச்சைக்காக, அண்மையில் விமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், குடியுரிமை அதிகாரிகள் அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்கவில்லை. இது தமிழகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தமிழர்களை இனப்படுகொலை செய்ததாக ராஜபக்ஷேவின் மீது சர்வதேச சமூகம் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், அவரது மகன் நாமல் ராஜபக்ஷே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்காக, நேற்று சென்னை வழியாக இந்தியா வந்தார். தகவலறிந்த தமிழ் ஆர்வலர்களும், பெரியார் தி.க.வினரும், சென்னை விமானநிலையத்தில் கூடி போராட்டம் நடத்தினர். 80 வயது பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுப்பு, இனப்படுகொலை செய்த ராஜபக்ஷே குடும்பத்திற்கு ராஜமரியாதையுடன் வரவேற்பா? என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுதொடர்பாக, 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil