த்ரிஷா இல்ல...தில்லுஷா!

19 April 2010 ·

* 'நித்யானந்த பவனம்' என்கிற தனது வீட்டின் பெயரை மாஜி நடிகை ராகசுதா மாற்றியிருக்கிறார். வீட்டின் சுவரில் இருந்த சாமியாரின் பெயர் தாங்கிய சலவைக்கல் எடுக்கப்பட்டு அந்த இடத்தில் 'அனுஜா' என்கிற பெயரில் புதுக்கல் பதிக்கப்பட்டிருக்கிறது. (மடியில் கனம் இருந்தால் பயம் வருமாம்..)
*காமெடி நடிகர்கள் வடிவேலு-சிங்கமுத்து இருவரும் முட்டிமோதிக்கொண்டு திரிவது முதலமைச்சர் கருணாநிதியை வருத்தப்பட வைத்துள்ளது. உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் எச்சரிக்கையாக இருப்பதில்லையே...என்றவாறு சில உச்ச நடிகர்களின் கதையை வைரமுத்துவிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். இதை கவிஞர் ஒரு விழாவில் பகிரங்கமாக போட்டு உடைக்க அங்கிருந்த வடிவேலு, விவேக், கருணாஸ் மூவரும் அலறி விட்டனர். "அய்யா..கவிஞரய்யா..! நாங்க அப்படிப்பட்ட ஆளுங்க இல்லன்னு கலைஞரய்யாவிடம் சொல்லுங்கய்யா.." என கூறியுள்ளனர். (வாரிசுகளும் இப்படி தலைவரிடம் சொல்லுவாங்களா..?)
* டைரக்டர் அகத்தியன் இரட்டைக் குதிரை சவாரி செய்பவர் என்பது இண்டஸ்ட்ரிக்கு தெரிந்த விஷயம். ரொம்பவும் தெரியாத விஷயம் அவர் 'ஆவி'களுடன் சகவாசம் வைத்திருப்பது. இவரது முதல் மனைவியின் மகள்கள் விஜயலட்சுமி, கார்த்திகா இருவரும் கலை உலகச் சேவை செய்வதைப் போல் இரண்டாவது மனைவியின் மகள் சவும்யாவும் சேவை செய்ய வந்து விட்டார். (வாழ்த்துகள்)
* 'என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே...' என தனது பேச்சின் தொடக்கத்தில் கலைஞர் சொல்வதைப் போல 'என் உயிரினும் மேலான தமிழ்மக்களே..' என சொல்லத் தொடங்கி இருக்கிறார் நடிகர் விஜய். (அப்பா அட்வைஸ்?)
* "பார்ட்டிகளில் கலந்து கொள்வதில் என்ன தப்பு? நண்பர்களும், நண்பிகளும் அங்கே நிறைய கிடைக்கிறார்கள். ஆடை வடிவமைப்பாளர் சிட்னியுடன் என்னை சேர்த்து கிசுகிசுக்கிறார்கள். அதை நான் சட்டை செய்யவில்லை" என கூறி வருகிறார் த்ரிஷா. (இவங்க த்ரிஷா இல்ல. தில்லுஷா!)

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil