காதலின் நரம்பு!

29 April 2010 ·


லக அளவில் திருமணத்துக்கான குறியீடு... மோதிரம்! பண்டைய எகிப்திய நாகரிகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது மோதிரம் மாற்றும் வரலாறு. பைபிளில் வரும் பர்வோனின் மக்கள்தான் முதலில் திருமணத்தின்போது மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். பாப்பிரஸ் இலை, நாணல், புல் ஆகியவற்றைவைத்து உருவாக்கியவை அன்றைய தினங்களில் திருமண மோதிரம்.

முடிவில்லாத மோதிரங்கள் அமரத்துவத்தைக் குறிக்கும் என்பதால், மோதிரத்துக்குத் திருமணங்களில் முக்கியத்துவம் கொடுத்தார்கள் எகிப்தியர்கள். அன்று எகிப்தியர்கள் இடது கையின் நடுவிரலில் மோதிரம் அணிவார்கள். 'வாழ்க்கைத் துணைக்கு அந்த விரலில் மோதிரம் அணிவித்தால், அது நம் மீதான அன்பை அதிகமாக்கும்' என்று நம்பினார்கள்.

கி.மு.332-ல் அலெக்சாண்டர் எகிப்தைக் கைப்பற்றியதில் இருந்து இந்த வழக்கம் கிரேக்கர்களிடமும் புழங்க ஆரம்பித்தது. பின்பு, ரோமானியர்களிடத்தில் இது கடத்தப்பட்டது. அவர்கள் மோதிரத்தைக் 'காதலின் நரம்பு' என்று விளித்தார்கள்.

உலோகவியல் கலை வளர வளர மோதிரங்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. தாலி சென்டிமென்ட் மாதிரி ஒவ்வொரு நாட்டிலும் மோதிர சென்டிமென்ட் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தன. பண்டைய ரோம் நகரத்தில் மோதிரங்கள் இரும்பால் செய்யப்பட்டன. 'துருப்பிடித்தாலும் இரும்பின் வலிமை போகாது. அதுபோலவே பிரச்னைகள் இருந்தாலும் கணவன் - மனைவிக்கு இடையே உள்ள அன்பு குறையக் கூடாது' என்பது கான்செப்ட். 17-ம் நூற்றாண்டில் இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய தேசங்களில் வெள்ளியினால் செய்யப்பட்ட திருமண மோதிரங்கள் மதிப்புமிக்கதாகப் பயன்படுத்தப்பட்டன. அதற்கடுத்த காலகட்டங்களில்தான் தங்கம், வைரம், பிளாட்டினம் மோதிரங்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. திருமணம் நடைபெறாதபோதோ, விவாகரத்தில் முடிகின்றபோதோ, மாப்பிள்ளை தன் மோதிரத்தை திருப்பிக் கேட்க முடியாது. அப்படித் திருப்பிக் கேட்பது குற்றச் செயல். மோதிரம் அணிவிப்பதையும் அதை ஏற்றுக்கொள்வதையும் சட்டப்பூர்வத் திருமணங்களாக பல நாடுகள் அங்கீகரிக்கின்றன. அங்கே ஒரு சின்ன மோதிரத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்துவிடலாம்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil