‘காவல்காரன்’ படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு வித்தியாசமான பார்ட்டியை கொடுத்து அசத்தியுள்ளார் அசின்.
விஜய்யின் ‘காவல்காரன்’ படத்தில் நாயகியாக நடிக்கிறார் அசின். இந்தியில் நடிக்கப் போன அவர், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் தமிழ்ப் படம் இது.
கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, வேறு பொழுதுபோக்கு ஏதுமில்லாததால் ரொம்பவே போரடித்ததாம் அசினுக்கு. எனவே பார்ட்டி வைப்போமா என்று நாயகன் விஜய்யிடம் கேட்க, அவரும் சம்மதித்ததால், ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு பூ பார்ட்டி என்று பெயர் வைத்தாராம் அசின்.
அது என்ன பூ பார்ட்டி... ? விருந்துக்கு வரும் எல்லோரும்... அதாவது ஹீரோ விஜய், இயக்குநர் சித்திக் உள்பட, காதில் ஒரு வெள்ளைப் பூவை வைத்துக் கொண்டு வரவேண்டும். ஆண்கள் இடது காதிலும், பெண்கள் வலது காதிலும் பூவை சொருகிக் கொண்டு வரவேண்டும் என்பது பார்ட்டி விதி.
ஹீரோயின் அசின் போட்ட கண்டிஷனாச்சே... மீற முடியுமா...? அத்தனை பேரும் காதில் பூவோடு அசின் பங்களாவுக்குப் போனார்கள். விதவிதமான உணவுகள், உற்சாக சமாச்சாரங்கள் பரிமாறப்பட, இரவு முழுக்க நடந்ததாம் பார்ட்டி.
பார்ட்டி முடிஞ்சு நாலு நாளாகியும் இன்னும் பூ பார்ட்டி பற்றி பேச்சு ஓயவில்லையாம் யூனிட்டில்!
அசின் கொடுத்த ‘காதுல பூ’ பார்ட்டி..!
அசின் கொடுத்த ‘காதுல பூ’ பார்ட்டி..!
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)



Ontario Time


0 comments:
Post a Comment