இப்பத்தான் பிரபாகரன் அட்டைப் படங்களை பத்திரிகைகள் கொஞ்சம் நிறுத்தி இருக்க அவர்களுக்கு அடுத்த தமிழ் ஆதரவு தெரிவிக்கிற விஷயம் கிடைத்துவிட்டது. - பார்வதி அம்மாள்.
இது தானே தமிழன்
பேனையே பெருச்சாளியாக்கிக் காட்டும் நமது மீடியா இப்படியொரு விவகாரம் கிடைத்தால் விடுவார்களா? நக்கீரன் பத்திரிக்கை காட்டமாக விமர்சித்து, கொடூரன்கள் என்ற புதிய விருதை வேறு கொடுத்திருக்கிறது, யாருக்கு என்பதுதான் கேள்விக்குறி. தமிழ் மக்கள் மீது நக்கீரனுக்கு தான் எவ்வளவு அக்கறை !. விரப்பனையே ஹீரோவாகவும், நித்தியானந்தா வீடியோவை பணத்துக்கும் காண்பித்த இவர்களுக்கு என்ன விருது கொடுப்பது என்று யோசிக்கணும்.
சோழர்களுக்கு பிறகு தமிழ்க் கலாச்சாரம் என்றால் போஸ்டர் கலாச்சாரம். சென்னை நகரில் அன்னை பார்வதி அம்மாளைத் திருப்பியனுப்பிய அரசே!! என்று அரசை வசை பாடும்வண்ணம், வித விதமான போஸ்டர்களில், வைகோ, பழ.நெடுமாறன் போன்ற இனமானக் குத்தகைதாரர்கள் காட்சி தருகின்றனர். அமீர், சீமான் போன்றோர் மிஸ்ஸிங்.
கிட்டத்தட்ட அதிமுக, காங்கிரஸ் நீங்கலாக அனைத்து கட்சிகளுமே இவ்விவகாரத்தில் அரசை எதிர்த்துப் பேசி வருகின்றன. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தர்மசங்கட்த்தில் தத்தளித்து வருவது திருமா மட்டுமே. பார்வதி அம்மையாரால் தமிழகத்தில் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் வராது. எனவே அவரை மறுபடியும் தமிழகத்திற்கு தருவித்து சிகிச்சை அளிக்க அரசு ஆவன செய்ய வேண்டுமென திருமா அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பாவம்!! அம்பேத்கர் சுடர் கொடுத்த கையோடு எதிர்த்து பேசவும் முடியாது, காங்கிரஸைப் பகைத்துக் கொள்ளவும் திராணி இல்லை. என்ன செய்வார்? பதவி என்று வரும்போது தமிழ் இனமானமாவது மண்ணாங்கட்டியாவது?
சட்டசபையில் இவ்விவகாரம் கிளப்பட்ட போது, அதிமுக அவையிலேயே இல்லை. அரசின் பக்கவாத்ய கோஷ்டியான காங்கிரஸார் அரசின் நடவடிக்கையை வரவேற்று விட்டு கடமையை சிரத்தையாக முடித்தனர்.
இவ்விவகாரத்தில் இன்னும் சில விடை தெரியாத சந்தேகங்களும், குழப்பங்களும் இருக்கிறது
அவர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு, மலேஷியாவிலுள்ள இந்தியத் தூதரகம் விசா அளித்திருக்கிறது. பார்வதி அம்மாள் இன்னாரென்று தெரியாமல் விசா அளிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவ்வாறிருக்கையில் அவரை எதற்காக இந்தியா வந்த பிறகு திருப்பியனுப்ப வேண்டும்? இங்கு சிலரால், சில தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க விரும்பி இருந்தால் முன்னமேயே விசா மறுத்திருக்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை ?
ஏற்கனவே பார்வதியம்மாள் மற்றும் வேலுப்பிள்ளை ஆகிய இருவரும் சுமார் இருபதாண்டு காலம் திருச்சி அருகேதான் வசித்தனர். அப்போதெல்லாம் பிரச்சனைகள் கிளப்பப்படாத போது, இப்போது மட்டும் பிரச்சனைகள் கிளப்ப்ப்படுவது எதனால் என்பது அடுத்த சந்தேகம். முதல்வரோ பார்வதி அம்மாள் திருப்ப அனுப்பப்பட அதிமுக ஆட்சியில் எழுதப் பட்ட கடிதம் தான் காரணம் என்று சொன்னார். அவரின் வரிகள் அப்படியே இதோ :
இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால், 5.5.2003 அன்று (அதிமுக ஆட்சி காலத்தில் )தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் பத்தி 2 வருமாறு:
Sri Lankan Tamils Velu Pillai and Parvathi Ammal may return to India. Their re-entry into India may not be desirable in view of their association with the LTTE Leader and Tamilar Desiya Iyakkam, banned organisations. Hence, the personal particulars of the above Sri Lankan Tamils are sent herewith to place their names under Black List/Prior Approval Category List, to prevent their re-entry into India through legal/illegal means.”
இவ்வாறு கடிதம் எழுதி, அதன் காரணமாக தடை விதிக்க ஏற்பாடு செய்தவர்கள் எங்கே அந்த உண்மை இங்கே வெளியிடப்பட்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ மிக முக்கியமான இந்தப் பிரச்சனையில் எல்லா கட்சிக்காரர்களும் குரலெழுப்புகின்ற இந்தப் பிரச்சனையில் அவர்கள் மாத்திரம் (அதிமுகவினர்) வராமல் இருந்து விட்டார்கள் என்பதைப் பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
அந்த அறிக்கையின் முதல் வரியில் இவ்வாறு உள்ளது:பிரபாகரன் தாயார் சென்னைக்கு வந்தது குறித்து தமிழக அரசுக்குத் தெரியாது. அவர் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக அரசு எழுதிய கடிதத்தால்தன் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வர விரும்பினால் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கூறினார்.
அம்மையார் தடை விதித்திருந்தார் அதனால் என்று கலைஞர் சொன்னார். ஆனால் இந்த 5 ஆண்டுகள் இவர் அந்த தடையை நீக்கவில்லை. இப்போது கடிதம் அனுப்புவோம் என்கிறார். இதில் இருந்து என்ன தெரிகிறது? இவர்கள் விரும்பினால் லெட்டர் எழுதி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்/செய்வார்கள் என்பது போல இருக்கு இந்த அறிக்கை.
மூன்றாவதாக, பார்வதி அம்மாளின் வருகை குறித்த விவரம் ஏதும் தெரியாது என்று தமிழக அரசு தெரிவித்திருப்பது. "மறுநாள் காலை பத்திரிகைகளைப் படித்தப் பிற்பாடுதான் தனக்கு விவரம் தெரியும்" என்று நாம் சொல்லலாம் ஆனால் தமிழக முதலமைச்சர் சொல்லுகிறார்.
முதலமைச்சர் கருணாநிதியின் அறிக்கையாக செய்தித்தாகளில் வந்த செய்தி:பார்வதி அம்மாள் திரும்ப அனுப்பப்பட்ட முழுத்தகவல் மறுநாள் காலையிலேதான் விவரமாகப் பத்திரிகைகளைப் படித்து தெரிந்துகொள்ள முடிந்தது. பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு வருவது பற்றி அவர்களிடமிருந்தோ, அவர்களுக்கு துணை புரிய விரும்புபவர்களிடமிருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ, தகவலோ நேரடியாக வரவே இல்லை. மத்திய அரசுக்கும், பார்வதி அம்மாளுக்கும் இடையே தான் இந்தப் பயணம் பற்றிய செய்தி தொடர்பு இருந்திருக்கிறதே தவிர, தமிழக அரசுக்கு இதிலே எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.
நிச்சயமாக சொல்கிறேன், அன்றைய இரவு 12 மணிக்கு விமான நிலையத்திலே இப்படிப்பட்ட ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்கு செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்திற்கு தொடர்பு கொள்கிறேன். அந்த அம்மையார் திரும்ப அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்ற அடுத்த செய்தி எனக்கு கிடைக்கிறது.
நெடுமாரனும், வைகோவுக்கு முன்பே இந்த விஷயம் தெரிந்துவிட்டதால் விமான நிலையத்திற்கு வந்த போது அவர்களை உள்ளே விடாமல் அதிகாரிகள் தடுத்திருக்கிறார்கள். வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. இதுவும் அடுத்த நாள் காலை பேப்பரில் வந்த பிறகு தான் பாவம் தெரிந்திருக்கும். ஏன் முதல்வர் அவ்வாறு சொல்ல வேண்டும்?
இதை எல்லாம் பார்க்கும் போது வழக்கமா இவர் எழுதும் கேள்வி பதில் அறிக்கைகளைக் கூட அடுத்த நாள் பேப்பரில் பார்த்து தான் தெரிந்துக்கொள்ளும் நிலையில்தான் இருக்காரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இலவசங்களை அடுத்து கலைஞரின் அடுத்த சாதனை பிரதமருக்கு கடிதம் எழுதுவது தான் ஏன் அதை இந்த விஷயத்தில் செய்யவில்லை ?
அடுத்த்தாக, பார்வதி அம்மாளுக்கு பிரபாகரன் தவிர ஓரிரண்டு மகன் மகள்களும் அயல்நாடுகளில் நல்ல நிலைகளில் இருப்பதாக்க் கேள்வி. அவ்வாறிருக்கையில் அவர் அவர்களிடம் செல்லாமல், இம்முதிய வயதில் ஏன் இவ்வாறு அங்குமிங்கும் அலைகழிக்கப்படுகிறார்? இன்னும் வேடிக்கை என்னவெனில், பெற்ற குழந்தைகள் அயல்நாட்டில் இருக்கையிலேயே தந்தை நோய் வாய்ப்பட்டு அகதி முகாமிலேயே உயிர்நீத்தார். தாயார் இப்போது ஆதரவின்றித் தவிக்கிறார். பெற்ற தாய் தந்தையரைப் பேணாத ஒரு குடும்பம், தமிழினத்தைக் காக்கப் புறப்பட்ட்து என்றால் நம்புவதற்கே சற்று கடினமாக இருக்கிறது.
ஏற்கனவே முத்துகுமரன் விஷயத்தில் அரசியல் ஆதாயம் தேடிய நம் தமிழ் தலைவர்கள் நிச்சயம் பார்வதி அம்மாள் வந்திருந்தால் அவருடைய பெயரால் விளம்பரம் அடைந்திருப்பார்கள், பத்திரிகைகள் போட்டி போட்டுக்கொண்டு கவர் ஸ்டோரி போட்டிருக்கும். அவ்வளவு தான். மனிதநேயம் என்று நம் ஊரில் உள்ள புலி ஆதரவுத் தலைவர்கள் சொல்லுவது எல்லாம் நல்ல ஜோக்!
முன்பு பிரியங்கா யாருக்கும் தெரியாமல் வந்து சிறை விதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு நளினியைப் பார்த்து விட்டுப் போனார். முதலமைச்சர் நினைத்திருந்தால் இதையும் அப்படி செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.
இது தானே தமிழன்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment