தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொழும்பு செல்வது பற்றி பரீசீலிக்கும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு இயக்குநர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய விருது வழங்கும் விழாவுக்காக சிறிலங்காவுக்கு அமிதாப் பச்சன் போவது குறித்து நாம் தமிழர் இயக்கம், கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய பங்காற்றுவதாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் இனப்படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து எமது நாம் தமிழர் தொண்டர்கள் மும்பையில் உள்ள அமிதாப் அவர்களின் வீட்டு முன்பு கடந்த ஞாயிறு அன்று முற்றுகைப்போராட்டம் நடத்தினர். அமிதாப் அவர்களைச் சந்தித்து 10 கோடித்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர். இந்த நிலையில் போராடிய எமக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.அமிதாப் நேற்று இது குறித்து கருத்து தெரிவிக்கையில் தமிழர்களின் உணர்வுகளைத்தான் புரிந்துள்ளதாகவும்,அவர்களது உணர்வுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் உட்பட அனைவரிடமும் பேசி இணக்கமான, நல்ல முடிவைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். கருப்புக்கொடி,ஆர்ப்பாட்டம் என்றாலே தமக்கு எதிரான ஒன்று என்று நினைக்கும் தலைவர்கள் மத்தியில், உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களின் வேதனையான உணர்வுகளைப்புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளித்து தமிழர்களுக்கு சாதகமான முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ள அமிதாப்பிற்கு நாம் தமிழர் இயக்கம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அமிதாப்அவர்களைப் பின்பற்றி ஷாருக்கான்,ஐஸ்வர்யாராய் உட்பட பிற நடிகர்களும் கலந்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன்.இந்த வெற்றி எமக்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழும் எம் தமிழ்ச்சொந்தங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.அமிதாப் அவர்கள் இதோடு நின்று விடாது ஈழத்தில் சிங்கள வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலைக்கு எதிராக எம் தமிழ்ச்சொந்தங்களுடன் இணைந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார். (இதையும் கருணாநிதி இரண்டு மணி நேர உண்ணா விரதத்தில் தான் என்ன கொடுமை ....... )கொழும்பு செல்வதைப் பரீசீலிக்கும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு இயக்குநர் சீமான் நன்றி!
சீமான் நன்றி (கருணாநிதி ௨ மணி நேர உன்ன விரதம் நாளை )
அமிர்தப் வாபஸ் வாபஸ் வாங்கினர் என அறிவிப்பார்
அதையும் வெக்கம் கேட்ட தி மு க தொண்டர் தங்கதலைவன் என
போஸ்டல் அடிப்பார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment