லேசுல தொடுறது இல்ல... தொட்டா... விடுறதில்ல ஆய்வில் புதிய தகவல்

19 April 2010 ·





புதுடெல்லி: புகைப்பிடிக்கும் பழக்கத்தை இந்தியர்கள் தாமதமாக தொடங்கினாலும், இறுதி வரை அதை கைவிடுவது இல்லை. அப்படியே விட்டாலும் 2 சதவீதம் பேர்தான் கைவிடுகின்றனர். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 40 சதவீதம் பேர் இந்த பழக்கத்தை விட்டு விடுகின்றனர்.
இந்தியாவில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் பற்றி, தேசிய பொது நிதி மற்றும் உலக சுகாதார ஆராய்ச்சி மையம் ஆய்வு நடத்தி உள்ளது. அதன்
அறிக்கையில் கூறி இருப்பதாவது:
இந்தியாவில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை மக்கள் தாமதமாகதான் தொடங்குகின்றனர். ஆனால், வயதான காலத்திலும் அதை விடுவதில்லை. இறுதி வரை அடிமையாகி விடுகின்றனர். உடல்நலன் பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் 2 சதவீதம் பேர் மட்டுமே இந்த பழக்கத்தை கைவிடுகின்றனர். ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் புகைப் பிடிக்கும் பழக்கத்தை ஆண்களோ, பெண்களோ சிறு வயதிலேயே தொடங்கி விடுகின்றனர். ஆனால், பிற்காலத்தில் 40 சதவீதம் பேர் கைவிட்டு விடுகின்றனர்.

பீடியோ, சிகரெட்டோ... இந்தியாவில் முதலில் ஒன்று அல்லது இரண்டு என்று தொடங்குபவர்கள் போகப் போக கணக்கில்லாமல் ஊதித் தள்ளும் நிலைக்கு சென்று விடுகின்றனர். இவ்வாறு புகைப்பது 10 சதவீதம் அதிகமானால் கூட, அவர்களின் ஆயுளில் ஓராண்டு குறைந்து விடுகிறது. இந்தியாவில் 20&24 வயதுக்கு உட்பட்ட நகர்ப்புற ஆண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் 1999ம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்தது. 2006ல் இது 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், அவர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. மேலும், 30 வயதில் பீடி பிடிக்கத் தொடங்கும் ஆண்களின் ஆயுட்காலம் 6 ஆண்டுகளும், பெண்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகளும் குறைகின்றன. சிகரெட் பிடிப்பவர்களின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் குறைகின்றன. சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் சிகரெட் மீதான கலால் வரி 17 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், சிகரெட் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை 2 லட்சம் பேர் கைவிட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சம் பேர் நடுத்தர வயது உடையவர்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites