முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுத பா விஜய் ஒரு படத்தில் நடிக்கிறார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்துக்கு இளைஞன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
கவிஞர் பா விஜய் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஞாபகங்கள் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் இது.
ரஜினியின் பாட்ஷா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இளைஞனை இயக்குகிறார். இது அவரது இயக்கத்தில் வரும் 50 வது படம்.
பா விஜய்க்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் மற்றும் மீனாட்சி ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் குஷ்பு நடிக்கிறார். வடிவேலு மற்றும் நாசர் போன்றவர்களும் இந்தப் படத்தில் உண்டு.
வித்யாசாகர் இசையமைக்க, பிஎல் சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பு நிகில்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை வரும் 28ம் தேதி முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு பா விஜய் நடிக்க, தாய்க்காவியம் என்ற படத்துக்கு பூஜை போடப்பட்டது நினைவிருக்கலாம். மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலையொட்டி தமிழில் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை நடை நாவல் அது.
இந்தப் படத்தை முதல்வர் கருணாநிதியே துவக்கி வைத்தும்கூட, சில காரணங்களால் அந்தப் படம் நின்று போனது.
இப்போது அந்தக் கதையையே, இளைஞன் என்ற பெயரில் எடுக்கிறார்கள்
கருணாநிதி வசனத்தில் பா.விஜய்யின் 'இளைஞன்'!
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment