17 April 2010 ·

அமெரிக்காவுக்கு முன்னோடியாகத் திகழும் தமிழக அரசு : கமல்ஹாசன் புகழாரம்

சென்னை,​​ ஏப்.​9, 2010 : உயிர் காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசு, அமெரிக்காவுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

உலக மலையாளிகள் சங்கமும், சென்னை மருத்துவ கழகமும் இணைந்து, 'ஹிருதயராகம்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதன் நல்லெண்ண தூதராக நடிகர் கமல்ஹாசன் இருந்து வருகிறார்.

இந்த இரண்டு அமைப்புகள் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டில் 60 ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. 2008-ம் ஆண்டில் 100 ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, சென்னையில் விடுதி கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்கு நிதி திரட்டுவதற்காக, தமிழ் - மலையாள நடிகர் - நடிகைகளுக்கு விருது வழங்குவது உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது என்று அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சி, வருகிற 18 ஆம் தேதி மாலை 5-30 மணிக்கு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. அதில், தமிழ் - மலையாள படவுலகை சேர்ந்த நடிகர் - நடிகைகள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த அமைப்பு சார்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், " இதுபோன்ற நற்காரியங்களை மக்களுக்கு முன்னெடுத்துச் செல்வதில் மீடியாக்களின் பங்குதான் அதிகம்.​ அமெரிக்காவில் உயிர் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வர பல முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.​ ஆனால் அதுபோன்ற நல்லதொரு ​உயிர் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி அமெரிக்காவுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.

எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை செய்பவர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி மனதாராப் பாராட்ட வேண்டும்.​ நமக்காகப் பணி செய்ய,​​ நாம் நியமித்தவர்கள்,​ அந்தப் பணியை நல்ல முறையில் செய்கிறார்கள் எனில் அதைப் பாராட்டுவதில் தவறில்லை.​ யாருக்கும் வியாதி இல்லை என்றால் டாக்டர்களுக்கு வேலையே இருக்காது.​ ​அப்படிப்பட்ட ஒரு சூழல் வருவதைத்தான் உண்மையான டாக்டர்கள் விரும்புவார்கள்.

இந்த நற்காரியத்துக்காக நடத்தப்படும் கலை விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.​ விருதுகள் மட்டும்தான் கலைஞர்களுக்கு.​ ஆனால் அதன் மூலம் பயன் அடையப்போவது எண்ணற்ற எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளே," என்றார் நடிகர் கமல்ஹாசன்


நன்றி விகடன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites